Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 மார்ச், 2020

ஆர்பிஐ அறிவிப்பின் எதிரொலி.. தடாலென வட்டியை குறைத்த பேங்க் ஆப் பரோடா..!






    இதன் எதிரொலியாக மத்திய ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 27 அன்று வங்கிகளுக்கான கடன் விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் குறைந்தது. மேலும் ரிவர்ஸ் ரெபோ விகிதத்தினையும் 0.90% குறைத்துள்ளது.
    ஆர்பிஐயின் அதிரடி நடவடிக்கை
    ரெபோ விகிதம் குறைந்துள்ளதால் வங்கிகளுக்கு திரும்ப செலுத்தும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மத்தியில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில் மக்கள் எதிர்பார்த்ததைப் போலவே இஎம்ஐ செலுத்த மூன்று மாத காலம் அவகாசம் வழங்க அனுமதி கொடுத்தது.
    கடன்களுக்கான வட்டி குறைப்பு
    இந்த நிலையில் ஆர்பிஐ அறிவிப்புக்கு இணங்க பேங்க் ஆப் பரோடா தனது சில்லறை மற்றும் தனி நபர், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தினை 7.25% ஆக குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது மார்ச் 28ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வட்டி குறையலாம்
    பேங்க் ஆப் பரோடா ரெபோ விகிதத்துடன் இணைகப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் குறைத்து 4.40% ஆக குறைந்துள்ளது. இது முன்பு 5.15% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அனைத்து வகையான தனி நபர் கடன், சில்லறை கடன்கள், எம்எஸ்எம்இ கடன், அடமான சொத்துக் கடன் என அனைத்துக்கும் வட்டி விகிதம் குறையலாம் எனவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.
    வாடிக்கையாளார்களுக்கு பலன்
    இந்திய ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கையின் படி, வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக இதன் பயன் அளிக்குமாறு பேங்க் ஆப் பரோடா தனது கடன்களுக்கான விகித்தினை ரெபோ விகிதத்துடன் இணைத்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் சலுகையை மக்களுக்கு நேரடியாக மக்களுக்கு அளிக்கும் விதமாக ரெபோ விகிதத்துடன் கடன் விகிதம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்பிஐயின் பலனை உடனடியாக பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக