Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 28 மார்ச், 2020

facebook-க்கு தகவலை ரகசியமாக அனுப்பும் ஜூம்?

வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப்


ஜூம் ஐஓஎஸ் ஆப் தங்களது பயனர்களின் தகவகலை ரகசியமாக பேஸ்புக்கிற்கு அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வைரஸ் கோவிட் 19

சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

தற்போது வரை மருந்து இல்லை

இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லாத காரணத்தால் உயிரிழப்பை தடுக்க முடியாமல் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது.

மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது

அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகிறது.

வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப்

வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏற்றபடி பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி அறிவித்து வருகிறது. அதேபோல் வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜூம் ஆப் குறித்து மதர்போர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஜூம் ஆப் IOS பயன்பாடு பயனர்களின் அனுமதியே இல்லாமல் பேஸ்புக்கிற்கு தகவல்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஜூம் ஆப் பயனர்களுக்கு பேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தங்கள் பயனர்களின் தகவலை பேஸ்புக்கிற்கு அனுப்புகிறது.

unique advertisement identifier

பேஸ்புக் வரைபட தகவல் API உடன் ஜூம் இணைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இதன்மூலம் (unique advertisement identifier) என்ற அடிப்படையில் பயனர்களுக்கு தேவையான விளம்பரங்களை காண்பிக்க முடியும்.

தனியுரிமைக் கொள்கை

ஜூம் ஆப் தனியுரிமைக் கொள்கையில் இந்த வகையான பரிமாற்றத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஜூம்-ன் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில், பாதுகாப்பு அம்சத்தில் இதுகுறித்து தனியுரிமைக் கொள்கையில் எதுவுமே இல்லை என்பது. ஜூம்-ன் தனியுரிமைக் கொள்கையை பகுப்பாய்வு செய்த ஆர்வலர் பாட் வால்ஷ் இதை கண்டறிந்து கூறியுள்ளார்.

ஜூம் எதுவும் விளக்கவில்லை

ஜூம் ஆப் பயனர்கள் பேஸ்புக் மூலம் உள்நுழையும் போது தான், இந்த சேவை தகவலை சேகரிக்கும் என குறிப்பிடுகிறது. இதில் ஒருவருக்கு பேஸ்புக் கணக்கு இல்லையென்றாலும் அவர்களின் கணக்கை சேகரிக்கிறதா என்பது குறித்து ஜூம் எதுவும் விளக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக