Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 28 மார்ச், 2020

ஆர்பிஐ அறிவிப்பு.. கிரெடிட் கார்டு இஎம்ஐக்கும் இந்த அவகாசம் உண்டா.. பதில் இதோ..!


அவகாசம் வழங்கலாம்

முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், அதனை மேற்கொண்டு பரவாமல் கட்டுப்படுத்தவும் தற்போது 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள், கூலித் தொழிலாளர்கள், தனியார் மற்றும் பொதுத்துறையை சேர்ந்த சில ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை நிலவி வருகின்றது.

இதனால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நிதி சலுகைகளை மற்றும் அறிவிப்புகளை வழங்கி வருகின்றன.

    அந்த வகையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆர்பிஐயின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், கொரோனா வைரசால் ஏற்படும் பொருளாதார பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக எல்லா வகையான கடன்களின் தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

    மூன்று மாதம் அவகாசம் வழங்கலாம்

    மேலும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் இருந்து 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கலாம். அதோடு, தவணை செலுத்த வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாச காலத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக்கடனாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

    வட்டிவிகிதம் குறைப்பு

    இது மட்டும் அல்ல வங்கி கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 5.15%ல் இருந்து 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்ட பல கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. சரி ரிசர்வ் வங்கியின் கடன் வசூல் கால அவகாசம் தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன, அவற்றில் சில கேள்விகளும், பதில்களும் இதோ..

    பாதிப்பினை தவிர்க்க சலுகை

    கொரானா தடுப்பு நடவடிக்கையின் தாக்கம் ஏழைய எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதற்காகத்தான் பல்வேறு பொருளாதார அறிவிப்புகளை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தான் வங்கிகள் கடனை வசூலிக்க 3 மாதங்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளது.

    கேள்வி & பதில்-1

    ஆர்பிஐ சொல்வது அனுமதித்தது போல எனது வங்கி எனது இஎம்ஐ- நிறுத்தி வைத்தால், எனது கடன் தகுதி அல்லது கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்துமா?

    இல்லை, நீங்கள் உங்கள் வங்கி அனுமதித்தால் இந்த மூன்று மாத காலத்திற்கு திரும்ப செலுத்த வேண்டியது இல்லை. அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எந்த விதமான எதிர்மறையான தாக்கத்தினையும் ஏற்படுத்தாது. இந்த கால அவகாசத்திற்கு பின்பு நீங்கள் செலுத்தலாம்.

    கேள்வி & பதில்-2

    எந்தெந்த நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த இஎம்ஐ சலுகையை அனுமதிக்கும்?

    இந்த சலுகையானது அனைத்து வர்த்தக வங்கி, கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், கோ-ஆப்ரேட்டிவ் பேங்க்ஸ், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் மற்றும் NBFCs, மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்டவை இஎம்ஐ சலுகையை ஒத்தி வைக்கலாம்.

    கேள்வி & பதில் -3

    எந்த கடன்களுக்கெல்லாம் இந்த இஎம்ஐ சலுகை கிடைக்கும்?

    ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன்கள், கல்விக் கடன்கள் உள்ளிட்ட பல கடன்களுக்கு இது பொருந்தும். மேலும் ஏசி, பிரிட்ஜ், மொபைல் போன்கள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் வாங்குவதற்காக எடுக்கப்பட்ட கடன்களுக்கும் இந்த இஎம்ஐ சலுகை வழங்கப்படும்.

    கேள்வி & பதில் - 4

    வட்டி மற்றும் அசல் இரண்டிலும் நிவாரணம் அளிக்கப்படுமா?

    மார்ச் 1, 2020 முதல் நிலுவையில் உள்ள அனைத்து கடன்களிலும் உங்கள் வங்கி அனுமதித்தால், 3 மாத காலத்திற்கு அசல் மற்றும் வட்டி இரண்டையும் உள்ளடக்கிய இஎம்ஐ கால அவகாசம் அளிக்கப்படலாம்.

    கேள்வி & பதில் - 5

    கிரெடிட் கார்டு பேமென்டுகளுக்கு இந்த அவகாசம் கிடைக்குமா?

    கிரெடிட் கார்டு கடன்கள் சுழலும் கடன் (revolving credit) என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இதற்கு நிவாரணம் அளிக்கப்படமாட்டாது. மேலும் இது டெர்ம் லோன் என்ற பிரிவின் கீழ் கிரெடிட் கார்டு கடன்கள் வராது என்பதால் கிரெடிட் கார்டு கடன்களுக்கு தொடர்ந்து இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும்.

    கேள்வி & பதில் - 6

    வணிகங்களுக்கு என்ன சலுகை என்ன?

    வணிகக் கடன்களுக்கும் ஆர்பிஐயின் இந்த அவகாசம் பொருந்தும், ஆக மார்ச் 1, 2020 முதல் நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும் பொருந்தும். மேலும் திவால் நிலை மற்றும் வாராக்கடனாகவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

    கேள்வி & பதில் - 7

    மாத மாதம் செலுத்தப்பட வேண்டிய இ.எம்.ஐ செலுத்தவில்லை என்றால் சிபில் ஸ்கோர் குறையாதா?

    கடன் தொகையை செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கையோ, சிபில் மதிப்பெண்ணை குறைக்கும் நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆக உங்கள் சிபில் ஸ்கோர் குறையாது.

    கேள்வி & பதில் - 8

    ப்ராஜெக்ட் லோன் எடுத்திருந்தால் இஎம்ஐ கட்ட வேண்டுமா?

    ப்ராஜெக்ட் லோன் என்பது தொழிற்சாலை கட்டுவதற்கோ, வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்காகவோ வாங்கப்படும் கடன். ஆக அதற்கும் அவகாசம் வழங்கப்படலாம். ஆனால், ப்ராஜெக்ட் லோன் எடுத்திருக்கும் உங்களின் நிலை தற்போதைய சூழலால் பாதிக்கப்பட்டு அதை உங்கள் வங்கி உணர்ந்து நீங்கள் இஎம்ஐ செலுத்த வேண்டாம் எனத் தெரிவித்தால் உங்களுக்கு நன்மை தான்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக