Motorola நிறுவனம் அதன் Moto G8 என்றும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது புத்தம் புதிய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை பெற்றிருந்தாலும் கூட, சார்ஜிங் மற்றும் கேமரா துறையில் பின்னடைவுகளை கொண்டுள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
லெனோவாவுக்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8 எனும் புதிய ஸ்மார்ட்போனை பிரேசிலில் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய மோட்டோ ஜி8 ஆனது எச்டி+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 சிப்செட், 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.
அதாவது புதிய மோட்டோ ஜி8 ஆனது நான்கு மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி8 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி8 ப்ளே ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இடையே அமர்ந்திருக்கும் அம்சங்களை கொண்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் மோட்டோ ஜி8 ஆனது மோட்டோ ஜி8 ப்ளே போன்ற அம்சங்களையே வழங்குகிறது. மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, ஆனால் மோட்டோ ஜி8 ஆசிய துணைக் கண்டத்திற்கு வருமா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
மேலே குறிப்பிட்டுள்ளபடி, மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மோட்டோ ஜி8 பிளேயுடன் மிகவும் ஒத்தவை. மோட்டோ ஜி8 பிளேவை போன்ற 6.4 இன்ச் எச்டி+ பஞ்ச்-ஹோல் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே ஆனது இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
மோட்டோ ஜி8 பிளஸ் ஒரு டியர் டிராப் நாட்ச் வடிவமைப்பை கொண்டிருந்தது, ஆனால் ஜி8 ப்ளே மேல் இடது மூலையில் பஞ்ச்-ஹோலுடன் வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தவிர மோட்டோரோலாவின் இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடனாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமரத்துறையை பொறுத்தவரை, மோட்டோ ஜி8 ஆனது 16 எம்பி (எஃப் / 1.7) + 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ சென்சார் என்க்ரியா ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை பெற்றுள்ளது. முன்பக்கத்தில் ஒரு 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவை வழங்கும் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஆனது 3.5 மிமீ ஹெட்ஜாக், டூயல் 4 ஜி, வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது.
தவிர இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 (அவுட் ஆப் பாக்ஸ்), 4000 எம்ஏஎச் பேட்டரி, 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. ரியல்மி போன்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பட்ஜெட் தொலைபேசிகளில் கூட 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்க மோட்டோரோலா வெறும் 10W சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் செல்வதை ஒரு பின்னடைவு என்றே கூறலாம்.
மோட்டோ
ஜி8 ஸ்மார்ட்போனின் விலை:
மோட்டோரோலாவின் மோட்டோ ஜி8 ஆனது நியான் ப்ளூ மற்றும் பேர்ல் ஒயிட் என இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற சிங்கிள் வேரியண்ட்டின் கீழ் மட்டுமே அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விலை நிர்ணயம் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.20,800 ஆகும். இந்தியாவில் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் ஆகும் என்பது பற்றிய தகவலை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
மோட்டோரோலாவின் மோட்டோ ஜி8 ஆனது நியான் ப்ளூ மற்றும் பேர்ல் ஒயிட் என இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற சிங்கிள் வேரியண்ட்டின் கீழ் மட்டுமே அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விலை நிர்ணயம் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.20,800 ஆகும். இந்தியாவில் மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் ஆகும் என்பது பற்றிய தகவலை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக