Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 6 மார்ச், 2020

அனிருத் போட்ட மாஸான குத்து பாடல் - வெறித்தனமான சம்பவம் செய்த விஜய்.!

  Image result for அனிருத் போட்ட மாஸான குத்து பாடல் - வெறித்தனமான சம்பவம் செய்த விஜய்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இத்திரைப்படத்துக்கு சேவியர் ப்ரிட்டோ தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி பல சாதனைகள் படைத்தது.

இந்நிலையில், தற்போது மாஸ்டர் படத்தின் மற்றொரு பாடல் குறித்து தகவல் வந்துள்ளது. இந்த பாடலை அனிருத் செம மாஸான குத்து பாடலாக அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் இதில் 100க்கும் மேற்பட்ட டான்ஸர்களுடன், விஜய் சிங்கிள் டேக்கில் ஆடும் வெறித்தனமான டான்ஸும் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் படம் என்றாலே பாடல்களும், அவரின் நடனமும் ஸ்பெஷல்தான். அதே விதத்தில் மாஸ்டர் படத்தில் வரும் பாடலும், ரசிகர்களுக்கு செம்ம விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!