மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்களில் வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதில் 11 மாத குழந்தை உட்பட 4 பேருக்கு இருமல், சளி, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுவரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்கள் வழியாக தமிழகத்திற்கு வந்த 96,729 பேர் சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 1,292 பேர் வீடுகளில் இருந்தே கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக