இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இந்த டாட்டா மோட்டார்ஸ்-க்கு, இந்தியாவின் உச்சபட்ச நுகர்வோர் ஆணையமான National Consumer Disputes Redressal Commission ஒர் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அப்படி என்ன தீர்ப்பு வழங்கிவிட்டார்கள் என்று கேட்கிறீர்களா..? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம். விளம்பரம் பிரதிப்தா குண்டு (Pradipta Kundu) என்பவர், கடந்த 2011-ம் ஆண்டு ஒரு டாடா இண்டிகோ கார் விளம்பரத்தைப் பார்த்து இருக்கிறார். அந்த விளம்பரத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இண்டிகோ கார் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 25 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் எனச் சொல்லி இருந்தது. கார் பட்சேஸ் அதோடு இந்த கார் தான், இந்தியாவிலேயே அதிக மைலேஜ் கொடுக்கக் கூடிய கார் எனவும் சொல்லப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தை நம்பி, காசு கொடுத்து டாடா இண்டிகோ காரை வாங்கிவிட்டார் பிரதிப்தா குண்டு. ஆனால் விளம்பரத்தில் சொன்ன படி, கார் ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 25 கிலோமீட்டர் போகவில்லை வழக்கு விளம்பரத்தில் சொல்லப்பட்டு இருந்தது போல, டாடா இண்டிகோ கார் மைலேஜ் கொடுக்க வில்லை. எனவே புதிய காரைக் மாற்றிக் கொடுக்குமாறு சொல்லி இருக்கிறார். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினர்கள் காரை மாற்றிக் கொடுக்கவில்லை. எனவே மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் முறையிட்டு இருக்கிறார். மாவட்ட தீர்ப்பு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையமோ, டாடா மோட்டார்ஸுக்கு எதிராக, காரின் விலையான 4.8 லட்சம் ரூபாயைத் திரும்ப கொடுக்கச் சொன்னது. அதோடு நஷ்ட ஈடாக 5 லட்சம் ரூபாயும் கொடுக்கச் சொன்னது. அது போக 10,000 ரூபாயை வழக்கு செலவுக்கு கொடுக்கச் சொன்னது. இதை மறுத்து மேல் முறையீடு எல்லாம் போய் கடைசியில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு வழக்கு வந்தது. இறுதி தீர்ப்பு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டார்கள். கடைசியாக, தவறாக விளம்பரப்படுத்தியதற்காக, பிரதிப்தா குண்டு-க்கு டாடா மோட்டார்ஸ் 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்றும், 1.5 லட்சம் ரூபாயை மாநில நுகர்வோர் நல நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதோடு டாடாவின் மறு பரிசீலனை மனுவையும் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக