இந்திய
மகளிர் அணி தற்போது மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு
தகுதி பெற்றிருக்கும் நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகளின்
ஒருவரான மிதாலிராஜ் சேலை அணிந்து பேட்டிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்
வைரலாகி வருகிறது
இந்தியர்களின் பாரம்பரிய உடையான
சேலை அணிந்து கொண்டு மிதாலி ராஜ் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒரு விளம்பரத்துக்காக
எடுக்கப்பட்டதாகவும் இந்த வீடியோவை மகளிர் தினத்தை முன்னிட்டு அதிகாரபூர்வமாக வெளியாக
இருப்பதாகவும், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரசிகர்கள் பார்க்கலாம் என்றும்
மிதலி ராஜ் கூறியுள்ளார்
சேலையுடன் கையில் பேட் வைத்திருக்கும்
அவர் கிரிக்கெட் வீராங்கனைகள் அணியும் அனைத்து உபகரணங்களையும் அணிந்து அட்டகாசமாக போஸ்
கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த வீடியோவை வரும் மகளிர் தினத்தன்று பார்க்க
அவருடைய ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது
Every saree talks more than you and I know! It never tells you to
fit in, it makes you stand out. This Women's day, #StartSomethingPriceless and
show the world that we can do it too. It's time you start living life
#OnYourTerms. Follow @CitiIndia page for more inspiring stories of women living
life on their own terms. @mastercardindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக