Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 மார்ச், 2020

PARKING செய்ய இடமிருக்கிறதா என்று Google Maps வழியாக "பார்ப்பது" எப்படி?

ங்களில் எத்தனை பேருக்கு Google Maps வழியாக Parking செய்ய இடம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க தெரியும்? ஒருவேளை தெரியாது என்றால் உடனே கற்றுக்கொள்ளுங்கள்!

இன்றைய அவசர கால மாநகர வாழ்க்கையில் கார் மற்றும் பைக்கின் தேவை அதிகமாக உள்ளது. எந்த ஒரு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தாலும் காரில் செல்பவர்கள் அதிகம் பயப்படும் ஒரு விஷயம் போகும் இடத்தில் பார்க்கிங் வசதி உண்டா இல்லையா என்பது பற்றி தான்.

குறிப்பாக மார்க்கெட், அல்லது வேறு புதிதாக செல்லும் இடங்களில் கார் பார்க்கிங் வசதி உண்டா இல்லையா என்பது குறித்து ஒரு குழப்பம் தோன்றும். காரை எங்கே பார்க் செய்வது என்று யோசித்துக் கொன்டே இருக்க வேண்டும். ஆனால் இது பற்றி இனி கவலைப்படத் தேவையில்லை.

நீங்கள் போக நினைக்கும் இடத்தில் பார்க்கிங் வசதி இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள கூகுள் மேப்பில் ஒரு அம்சம் உள்ளது. இது பார்க்கிங் வசதி குறித்த தகவலை உறுதி படுத்துகிறது. இதனை கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா ? இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும்.

இதன் பயன்பாட்டை அறிந்து கொள்வதற்கு முன் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்வது அவசியம். தற்போது எந்த இடத்தில் பார்க்கிங் வசதி காலியாக உளள்து என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியாது. இந்த இடங்களில் பார்க்கிங் வசதி பெறுவதில் சிக்கல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மட்டுமே உதவும்.

இதை சாத்தியப்படுத்த உங்களுக்கு என்னவெல்லாம் தேவைப்படும்?

- கூகுள் மேப்ஸின் சமீபத்திய பதிப்பு
- Location பற்றிய சேவைகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
- நல்ல இன்டர்நெட் இணைப்பு அவசியம்

பார்க்கிங் செய்ய இடமிருக்கிறதா என்பதை கூகுள் மேப்ஸ் வழியாக பார்ப்பது எப்படி?

கூகுள் மேப்பை திறந்து கொள்ளவும். நீங்கள் சென்றடைய வேண்டிய இலக்கை குறிப்பிடவும்.
கீழே உள்ள “டைரக்ஷன்” என்ற பட்டனைத் தட்டவும்.

“ஸ்டார்ட்” பட்டன் தென்பட்டவுடன் கீழே உள்ள பட்டியை மேல் நோக்கி நகர்த்தவும்.
நீங்கள் சென்றடைய வேண்டிய இலக்கில் பார்க்கிங் வசதி எளிமையாக இல்லை என்பதைக் குறிக்கும் P என்ற அடையாளத்தை நீங்கள் காணலாம்.

 அடிப்படையாக நீங்கள் செய்ய வேண்டியது , நீங்கள் செல்ல வேண்டிய இலக்கிற்கான முகவரியை டைப் செய்து, டைரக்ஷன் பட்டனை தட்டி வழிசெலுத்துதலைத் தொடங்குங்கள்.

நீங்கள் தற்போது இருக்கும் இடம் மற்றும் அங்கிருந்து நீங்கள் செல்ல வேண்டிய இலக்கிற்கான வழியை அறிந்து கொள்வதற்கான பக்கம் திறக்கப்படும். அதில் போக்குவரத்து தகவல் மற்றும் சென்றடையக் கூடிய கால அவகாசம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் கீழ் பகுதியில் உள்ள பட்டியை தட்டினால் அந்த பக்கம் மேலும் விரிவடையும் .

அந்த இடத்தில் பார்க்கிங் வசதியின் நிலையை குறிப்பிடும் வகையில் ஒரு வட்டத்திற்குள் P என்ற லோகோ காணப்படும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றி , நீங்கள் குறிப்பிட்ட இலக்கில் பார்க்கிங் செய்வது கடினம் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். எந்த இடத்தில் பார்க்கிங் வசதி உள்ளது என்பதை சரியாக தெரிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக