![](https://static.langimg.com/thumb/msid-74303091,width-630,resizemode-4,imgsize-629781/74303091.jpg)
மத்திய
ஆப்ரிக்காவில் உள்ள மேகரூன் என்ற நாட்டன் வடமேற்கு பகுதியில் ஒரு எரிமலை உள்ளது. இந்த
மலை வெடித்து சிதற இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது. அந்த பகுதியில் நயோஸ் என்ற ஒரு
ஏரி உள்ளது. வழக்கமான மலைப்பகுதியில் இருக்கும் ஏரி தான் அது.
ஏரி
இந்நிலையில்
கடந்த 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி இரவு 9 மணியளவில் அந்த ஏரியை
சுற்றியுள்ள ச்சா, நயோஸ், மற்றும் சுபும் ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு
திடீரென சுவாசிக்க முடியாமல் போனது. அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள மக்கள்
எல்லாம் பெருமபாலும் தூங்க சென்று விட்டனர். தூக்கத்திலேயே மூச்சு விட முடியாமல்
திணறினர்.
25 கிலோ மீட்டர்
படிப்படியாக
இந்த நிலை சுற்றிலும் பரவ துவங்கியது. மக்கள் எல்லாம் காற்றில் உள்ள ஆக்ஸின் அளவு
குறைந்ததால் சுவாசிக்க முடியவில்லை. இதை அந்த ஏரியை சுற்றியுள்ள 25 கிலோ மீட்டர்
வரை வசித்த மக்கள் உணர்ந்தனர்.
மூச்சு திணறல்
சிலர்
மூச்சு திணறலிலும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியாமல் இருந்தனர். சிலர்
எழுந்து என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முடியாமல் திணறினர். இந்நிலையில் சில
நிமிடங்களில் சிலரின் மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் வர துவங்கியது.
ஆக்ஸிஜன்
மூளைக்கு
சரியாக ஆக்ஸிஜன் செல்ல வில்லை என்றால் இப்படியாக மூக்கு மற்றும் வாய் வழியாக
ரத்தம் வரும். தொடர்ந்து மூச்சு திணறல் தொடர்ந்ததால் மூக்கு மற்றும் வாய் வழியாக
ரத்தம் வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலைமை தொடர்ந்து
நீடித்துக்கொண்ட இருந்தது.
மரணம்
இந்நிலையில்
ஒவ்வொருவராக மூச்சு விட முடியாமல் மயங்கினர். மற்றவர்கள் அவர்களே மூச்சு விட
முடியாததால் அங்கும் இங்கு ஓட முயற்சித்தனர். ஆனால் எங்கு சென்றாலும் ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை.
இதனால் ஒவ்வொருவராக மரணமடைந்தனர். பலர் மயங்கி விழுந்தனர்.
3 மணி நேரம்
சிலர்
மூளையில் வெடிப்பே ஏற்பட்டு துடிதுடித்து இறந்து போனார்கள். இது என்ன? ஏன் இப்படி
நடக்கிறது என யாருக்கும் புரியவில்லை. சிலர் மட்டுமே மூச்சு திணறலுடன் உயிர்
பிழைத்தனர். ஏராளாமானோர் சில நிமிடங்களில் தங்கள் உயிரையே விட்டனர். இந்த
சூழ்நிலை சுமார் 3 மணி நேரத்திற்கு பின்புதான் சரியானது.
நிலைமை சீர்
கிட்டத்தட்ட
அந்த ஏரியை சுற்றியிருந்த 25 கி.மீ பகுதியில் இந்த மூச்சு திணறல் ஏற்பட ஆரம்பித்து
சுமார் 1 மணி நேரத்திற்குள் அத்தனை பேரும் மயங்கிவிட்டனர். பலர் இறந்துவிட்டனர்.
கிட்டத்தட்ட அனைவருக்கும் மூக்கு, வாய் மற்றும் காது வழியாக கூட ரத்தம் வந்தது.
சுமார் 3 மணி நேரத்திற்கு பின்பு அப்பகுதியில் மீண்டும் ஆக்ஸிஜன் பரவ துவங்கியது.
அதன் பின்பு மயங்கியவர்களில் சிலர் மட்டும் முழிக்க துவங்கினர். பலர்
மயக்கத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
விலங்குள் கூட பலி
நள்ளிரவில்
என்ன நடந்தது என தெரியாமல் மக்கள் எல்லாம் அழதுவங்கினர். தங்கள் உறவினர்களையும்
குடும்பத்தையும் இழந்து பலர் கதறினர். ஏன் இப்படி நடந்தது நம்மை சுற்றி என்ன
நடக்கிறது என அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்நிலையில் காலையில்
விடிந்ததும் இந்த செய்தி வெளிபுறங்களில் பரவியது. அப்பொழுது தான் அந்த கிராம
மக்களுக்கு அந்த கிராமம் மட்டுமல்ல அவர்களை சுற்றி பல கிராமங்களில் இப்படி நடந்தது
தெரிய வந்தது. இது மட்டுமல்ல அந்த கிராமங்களில் உள்ள விலங்குகள், பறவைகள், ஏன்
பூச்சிகள் கூட இதில் செத்து கிடந்தது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை
இதை
கண்டு விஞ்ஞானிகள் வந்து ஆய்வு நடத்தினர். முதலில் எதையுமே கண்டுபிடிக்க
முடியவில்லை. பின்னர் இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது
அவர்கள் எல்லாம் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்திருக்கிறார்கள் என்பது. பின்பு
உயிருடன் இருப்பவர்களிடம் நடந்ததை விசாரித்த பின்பு காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன்
குறைந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
ஆய்வு
எப்படி
காற்றில் ஆக்ஸிஜன் குறைந்தது என் ஆய்வு செய்யும் போது ஆக்ஸிஜன் குறைய காரணம்
அப்பகுதியில் கார்பன்டை ஆக்சைடு காற்றில் அதிகம் கலந்திருக்கலாம் என ஆலோசித்தனர்.
பின்னர் அப்பகுதியில் நடத்திய ஆய்விலும் இப்படியான ஆக்ஸிஜன் குறைபாட்டை உணர்ந்த
பகுதிகளை ஆய்வு செய்த போது அதற்கு மத்தியில் இருந்தது இந்த ஏரிதான்.
கார்பன் டை ஆக்ஸைடு
பின்னர்
ஏரியில் ஆய்வுகளை தொடர்ந்தனர். ஏரியை ஆய்வு செய்ம் போது தான் ஒரு விஷயம் தெரிய
வந்தது அந்த ஏரி நீரில் கார்பன்பை ஆக்ஸைடின் அளவு அதிகமாக இருந்திருக்கிறது. அப்பொழுது
தான் விஞ்ஞானிகள் ஏரியிலிருந்து தான் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறியிருக்க வேண்டும்
என கருதினர்.
குழப்பம்
பின்னர்
நடந்த ஆய்வில் அது உறுதி செய்யப்பட்டது. ஆனால் எப்படி கார்பன்டை ஆக்ஸைடு
இந்தஏரியிலிருந்து வெளியேறியது? என ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய நினைத்தனர். அதற்காக
ஏரியின் அடிப்பகுதிக்கு சென்று ஆய்வுகளும் நடத்தினர். ஆனால் ஏரிக்குள் எந்த வித
மாற்றமும் இல்லை. எல்லாம் வழக்கம் போல தான் இருந்தது. பின்னர் எப்படி அப்படியான
கார்பன் டை ஆக்ஸைடு வெளியானது என யாருக்கு தெரியவில்லை.
என்ன நடந்தது?
ஆனால்
மக்களுக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றால் சுமார்
ஏரிமட்டத்திலிருந்து 50 மீட்டர் உயிரத்திற்கு 3 லட்சம் முதல் 16 லட்சம் டன்
அளவிலான அடர்த்தியான கார்பன் டை ஆக்ஸைடு வெளியாகியிருக்க வேண்டும். அவை 100 கிலோ
மீட்டர் வேகத்தில் மலையிலிருந்து கீழ் நோக்கி வந்து கொஞ்சம் கொஞ்சமாக காற்றோடு
கலந்திருக்க வேண்டும்.
குட்டி சுனாமி
ஆனால்
அவ்வளவு கார்பன்டை ஆக்ஸைடு ஒரே நேரத்தில் வெளியானால் ஏரியில் உள்ள தண்ணீருக்குள்
குண்டு வெடித்தது போல சத்தம் ஏற்பட்ட குறைந்தது 90 அடி உயரத்திற்காவது தண்ணீர்
ஒரு குட்டி சுனாமி போல சிதறியிருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
1746 பேர் பலி
இந்த
சம்பவத்திற்கு பின்பு நடந்த ஆய்வில் இந்த ஏரியிலிருந்து வெளியேறிய கார்பன் டை
ஆக்ஸைடு 1746 பேரைபலி வாங்கியது தெரியவந்தது. இது ஒரு பெரும் இயற்கை பேரழிவாகவே
பார்க்கப்பட்டது. மேலும் இதில் 3500க்கும் அதிகமாக கால்நடைகளும் பலியாகிவிட்டன.
இத்தனை மரணங்களும் சில நிமிடங்களில் நடந்துவிட்டது.
பழைய சம்பவம்
இது
போன்ற சம்பவங்கள் உலகில் வேறு சில ஏரிகளிலும் நடந்துள்ளது. ஆனால் அது எல்லாம்
சிறிய அளவில்தான். மோனோன் என்ற ஏரியில்நடந்த இவ்வாறான கார்பன்டை ஆக்ஸைடு
வெளியேற்றத்தால் 37 பேர் பலியாகினர்.
இனிமேல் நடந்தாலும்
கவலையில்லை
இந்த
சம்பவம் ஏன் நடந்தது? எப்படி நடந்தது என்பது தெரியாவிட்டாலும் இனிமேல் இது போல்
நடந்தால் அதிலிருந்து மக்கள் அழிவதை எப்படி தவிர்ப்பது என யோசித்தனர். அதற்காக
கடந்த 2001ம் ஆண்டு அந்த ஏரிக்கு அருகே ஒரு பெரிய பைப் ஒன்றை கட்டுமானம் செய்தனர்.
அந்த பைப் அப்பகுதியில் உள்ள கார்பன் டைஆக்ஸைடுகளை உறிஞ்சு எடுத்து பின்னர்
காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக கலக்கும். இதனால் மீண்டும் இந்த ஏரியில் இப்படியான
பேரழிவு நடந்தால் அதிலிருந்து மக்கள் இறப்பதை தவிர்க்கலாம் என விஞ்ஞானிகள்
கூறியுள்ளனர்.
தீராத மர்மம்
இந்த
கார்பன் டை ஆக்ஸைடு எப்படி? காற்றில் கலந்திருக்கும்? இதற்கான அறிவியல் காரணத்தை
ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தும் இது குறித்து
மக்களிடம் ஏன் விழிப்புணர்வு இல்லை? இவை எதற்குமே பதில் இல்லை. எல்லாமே தீராத
மர்மம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக