ஆண்களின்
ஆண்குறி எலாஸ்டிக் தன்மை வாய்ந்தது என்பது தெரியுமா? நார்மலாக ஆண்களின் ஆண்குறி சுமார்
5.2 அங்குல நீளமும் 4.6 அங்குல சுற்றளவும் கொண்டும் காணப்படும். இது ஒவ்வொரு ஆணுக்கும்
வித்தியாசப்படவும் செய்யலாம்.
ஆண்குறி சுருங்குவது 1 அங்குலத்தை
விட குறைவாக இருக்கும். ஆனால் சிலபேருக்கு இந்த சுருங்குதல் கொஞ்சம் அதிகமாக இருக்க
வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களின் சுறுசுறுப்பான, திருப்திகரமான பாலியல் வாழ்க்கை
பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
சில பேருக்கு இந்த சுருக்கம்
நிரந்தரமான ஒன்றாகவோ அல்லது சில பேருக்கு அவர்களுடைய வாழ்க்கை முறை மாற்றங்களால் கூட
நிகழலாம். இது குறித்து பாலியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்த போது, இந்த ஆண்குறி சுருக்கம்
என்பது ஆண்குறியில் உள்ள இரத்த குழாய் களுக்கு இரத்த ஓட்டம் சரியாக போகாதததால் ஏற்படுகிறது
என்றும் கூறியுள்ளனர்.
இப்படி ஆண்குறியில் சுருக்கம்
ஏற்பட அவர்களின் வயது, புகைப்பழக்கம், உடல் பருமன் போன்ற பல காரணங்களும் காரணமாக அமைகிறது.
வேறு எந்த மாதிரியான காரணிகள் இதற்கு மூல ஆதாரமாக உள்ளன என்பதை இங்கே காண்போம்.
காரணங்கள்
ஆண்களுக்கு
வயதாகும் போது அவர்களுடைய விந்தணுக்கள் மற்றும் ஆண்குறியில் சுருக்கங்கள்
ஏற்படும். அதே மாதிரி ஆண்களின் உடல் பருமனும் சுருங்கிப் போவதற்கு காரணமாக
அமைகிறது. சராசரி ஆண்குறி அளவு குறித்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்த தகவல்கள்.
ஒரு
மெல்லிய ஆண்குறியின் சராசரி நீளம்: 9.16 சென்டிமீட்டர் (சுமார் 3.6 அங்குலங்கள்)
மெல்லிய
நீட்சியடைந்த ஆண்குறியின் சராசரி நீளம்: 13.24 செ.மீ (சுமார் 5.3 அங்குலங்கள்)
முழு
விறைப்பு நிலையில், நிமிர்ந்த ஆண்குறியின் சராசரி நீளம்: 13.12 செ.மீ (சுமார் 5.2
அங்குலங்கள்)
ஆண்குறியின்
சராசரி சுற்றளவு: 9.31 செ.மீ (சுமார் 3.7 அங்குலங்கள்) இதுவே நிமிர்ந்த
ஆண்குறியின்
சராசரி சுற்றளவு: 11.66 செ.மீ (சுமார் 4.6 அங்குலங்கள்) என்று ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
ஆண்குறி சுருங்கி
விரிதல் செயல்பாடு
மனிதனுடைய
ஆண்குறியில் எழுச்சிக்கு என்று எலும்புகள் கிடையாது. மாறாக இரத்த அழுத்தம்
மூலமாகவோ விறைப்புகள் ஏற்படுகின்றன. ஆண் குறியினுள் பஞ்சு போன்ற திசுக்கள் அமைந்து
இருக்கும். இவற்றினுள் ஏராளமான இரத்தக் குழாய்கள் செல்கின்றன. ஆண்கள்
கிளர்ச்சியுறும் போது இரத்தம் ஓட்டம் அதிகமாகி ஆண்குறி நீட்டிப்பை பெறுகிறது.
பிறகு ஆண்குறி சுருங்கி பழைச நிலைக்கு வருகிறது. எனவே இரத்த ஓட்டத்தில் பாதிப்பு
இருக்கும் போது சுருங்கி நீட்சியடைதலில் பிரச்சனைகள் எழுப்புகின்றன. இந்த அளவில்
மாற்றம் ஏற்படும் போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.
ஆண்குறி சுருங்குவதற்கான
விளைவுகள்
வயது
உங்களுக்கு
வயதாக வயதாக உங்க ஆண்குறியின் விந்தணுக்கள் மற்றும் அளவு குறைய ஆரம்பிக்கும்.
இதற்கு காரணம் ஆண்குறியின் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து இரத்த ஓட்டத்தை
தடை செய்ய ஆரம்பித்து விடும். இதனால் ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு காரணமான பஞ்சு
போன்ற குழாய்களில் உள்ள செல்கள் ஒவ்வொன்றாக இரத்த ஓட்டம் இல்லாமல் சுருங்க
ஆரம்பித்து விடும்.
இதனால் பாலியல் வாழ்க்கை திருப்தியை அளிக்காது. காலப்போக்கில்
நீங்கள் பாலியல் இன்பம் பெறும் போது மற்றும் விளையாட்டுகளில் ஏற்படும் காயங்களால்
திசுக்கள் அழிந்து விட வாய்ப்புள்ளது. இந்த காயங்கள் பஞ்சு போன்ற குழாய்
திசுக்களில் ஏற்படுவதால் ஆண்குறி அளவில் குறைகிறது. அதே மாதிரி 40 வயதிற்கு மேல்
செக்ஸூவல் ஹார்மோன் அளவும் நிறுத்தம் ஆவதால் ஆண்குறி சுருங்க ஆரம்பிக்கிறது.
உடல் பருமன்
குறிப்பாக
அடிவயிற்றில் தொப்பை போட்ட ஆண்களுக்கு ஆண்குறி பார்ப்பதற்கு சிறியதாக தோன்றும்.
காரணம் தொப்பை கொழுப்புகள் அப்படியே அடிவயிற்றில் படிந்து உங்க ஆண்குறியை சிறியதாக
காட்டும் அவ்வளவு தான். இதனால் ஆண்குறி பார்ப்பதற்கு சிறியதாக தோன்றலாம். ஆனால்
உண்மையில் ஆண்குறி சுருங்கவில்லையாம்.
அடிவயிற்றுக்
கொழுப்புக்கள் தேங்கித் தேங்கி தொப்பை பெரிதாக ஆகின்ற பொழுது, வெறும் தோல்களால்
மூடப்பட்டிருக்கும் ஆணுறுப்பை சிறயதாகவும் சுருங்கிய நிலையில் இருப்பது போலவும்
தோற்றம் கொண்டிருக்குமாம். அதனால உடல் பருமனுக்கும் ஆணுறுப்பு சுருங்குதலுக்கும்
பெரிய அளவில் தொடர்பில்லை என்றே சொல்லப்படுகிறது.
புரோஸ்டேட் அறுவை
சிகிச்சை
ஆண்குறியில்
ஏற்படும் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆண்குறி சுருங்கி காணப்படுகிறது
என்று 70 சதவீத ஆண்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த புரோஸ்டேடெக்டோமி சிகிச்சைக்கு
பிறகு இப்படி ஏன் ஏற்படுகிறது என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை. ஆனால் அறுவை
சிகிச்சை செய்த பிறகு ஆண்களின் விறைப்புத்தன்மையில் பிரச்சனை ஏற்படுகிறது.
இதனால்
ஆண்குறியில் உள்ள பஞ்சு போன்ற குழாய் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன்
கிடைப்பதில்லை. இதனால் திசுக்கள் சுருங்க ஆரம்பித்து விடுகிறது. புரோஸ்டேட் அறுவை
சிகிச்சைக்கு பிறகு ஆண்குறி 1/2 - 3/4 அங்குலமாக இருக்கும். இது ஆண்குறி
மெல்லியதாக இருக்கும் போது மற்றும் நீட்சியடையும் போது அளவிடப்படுகிறது.
பெய்ரோனியின்
நோய்த்தாக்கம் (ஆண்குறி வளைந்து போதல்)
பெய்ரோனியின்
நோயில் ஆண்குறியின் உள்ளே உள்ள காயம்பட்ட திசு அல்லது வடு திசுவால் ஆண்குறி
வளைந்து போதல் தன்மை உண்டாகிறது. இதனால் உடலுறவு மேற்கொள்ள முடியாத நிலை அல்லது
உடலுறவின் போது வலி உண்டாகிறது. இந்த நோயும் ஆண்குறியின் நீள அகலங்களை
சுருக்குகிறது. அதே மாதிரி இதை சரி செய்ய நீங்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும்
ஆண்குறி சுருக்கம் வாய்ப்புள்ளது.
மருந்துகள்
நாம்
பயன்படுத்தும் சில மருந்துகள் கூட ஆண்குறி சுருக்கத்தை உண்டு பண்ணுகிறது.
புரோஸ்டேட் பிரச்சனைகளுக்கு சிகச்சை அளிக்கும் பல மருந்துகள் உங்க ஆண்குறியை
சுருக்குகின்றன. ஃபினாஸ்டரைடு, டூட்டாஸ்டரைடு போன்ற மருந்துகள் ஆண்குறி
சுருக்கத்திற்கு காரணமாக அமைகிறது.
புகைப்பிடித்தல்
புகைப்பிடிக்கும்
ஆண்களுக்கு ஆண்குறி சுருங்கும் பிரச்சனை ஏற்படுகிறது. காரணம் புகையிலையில் உள்ள
கெமிக்கல்கள் ஆண்குறியின் இரத்த குழாய்களை பாதிக்கிறது. இதனால் ஆண்குறி
நீட்டப்படுவது சுருங்குதல் சிக்னல்கள் மூளைக்கு செல்வது தடைபட்டு ஆண்குறி
சுருங்குதல் பிரச்சனை உண்டாகிறது.
இது குறித்து 1998 ஆம் ஆண்டு ஒரு ஆய்வு
நடத்தப்பட்டது. இதில் 200 ஆண்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் முடிவின் மூலம்
தெரிய வந்தது என்னவென்றால் புகைப்பழக்கம் இருக்கும் ஆண்கள் புகைப்பழக்கம் இல்லாத
ஆண்களை விட ஆண்குறி சுருக்கம் அதிகமாக கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே
புகைப்பிடிப்பது உங்க நுரையீரலை மட்டுமல்ல ஆண்மையையும் சேர்த்து பாதிக்கிறது
என்கிறார்கள் மருத்துவர்கள்.
சிகிச்சைகள்
ஆண்குறி
சுருக்கத்திற்கு ஆண்களுடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் காரணமாக உள்ளன. எனவே
புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் இவற்றை தவிர்க்க முற்படலாம்.
நீங்கள்
புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்து இருந்தால் காலப்போக்கில் இந்த பிரச்சினை சரியாகி
விடும். இல்லையென்றால் ஆண்குறி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வயாகரா மற்றும்
சியாலிஸ் போன்ற மருந்துகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
பெய்ரோனியின்
நோய்க்கான சிகிச்சை முறையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து அறுவை சிகிச்சை செய்து
வடு திசுக்கள் க்களை ரிமூவ் செய்து விடலாம் . அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆண்குறி
சுருக்கத்தை சரி செய்ய இயலாது. ஆனால் வளைந்த ஆண்குறியை சரி செய்து உங்க பாலியல்
வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக