Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 மார்ச், 2020

PM CARES-க்கு ரூ.150 கோடி.. ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.500 கோடி.. எல்&டியின் பிரமாண்ட உதவி..!






ஊதியம்
இந்தியா கொரோனாவுக்கு எதிரான பெரிய யுத்தத்தினை மேற்கொண்டு வரும் நிலையில், நன்கொடை வழங்க அனைத்து தரப்பு மக்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது நிச்சயம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு இது வழிவகுக்கும். அதாவது கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையிலும் இது உதவும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிதியினை PM CARES என்கிற பெயரில் நிதி பெறுவதற்கான வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது. ஆக மக்கள் pmindia.gov.in எனும் இணையதளத்திற்கு சென்று பொதுமக்கள் நிதி வழங்கலாம் என்றும் பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதையடுத்து பலரும் நிதியினை வாரி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம்
இந்த நிலையில் நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான larsan & Turbo (L&T) நிறுவனம், தனது 1,60,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக மாதத்திற்கு 500 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளது. இது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் இருக்கும் ஒப்பந்த ஊழியர்கள், மற்றும் தங்களது முகாம்களில் தங்கியிருக்கும் ஊழியர்களுக்கும் போதுமான அடிப்படை வசதிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு நடவடிக்கை
மேலும் நிறுவனம் சுகாதாரம் மற்றும் கழிவு சுகாதாரத்தினை பராமரித்து வருவதாகவும், தொழிலாளர்கள் முகாம்களில் சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பை டெல்லி கொல்கத்தா மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் உள்ள கட்டுமான தளங்களில் இருந்து பணம் மற்றும் தங்குமிடம் குறித்த கவலைகள் தொடர்ந்து இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தனிமைபடுத்தும் மையமாக மாற்றப்படும் பயிற்சிக்கூடம்
மேலும் இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் கொரோனாவின் தாக்கம் மத்தியில், உடனடி நிதி மூலமாகவும், இது தவிர எங்களது பயிற்சி மையங்களை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும் எல் & டி தெரிவித்துள்ளது. இதையடுத்து பிஎம் கேர்ஸூக்கு இந்த கொடிய தொற்றினை எதிர்த்து போராடுவதற்காக 150 கோடி ரூபாய் நிதியினை அளிக்க உள்ளதாகவும் எல் & டி தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் வங்கி கணக்கில் ஊதியம்
இது தவிர இந்த நிறுவனம் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கான ஊதியத்தினை அவர்களின் வங்கிக் கணக்கிலும் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. ஒப்பந்த ஊழியர்கள் வேலைக்கு வராத நிலையில் கூட அவர்களுக்கு உதவும் வகையில் சம்பளத்தினை வங்கி கணக்கில் அனுப்ப உள்ளதாக கூறுவது, ஊழியர்களுக்கு இந்த சமயத்தில் மிக உபயோகமுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக