இந்தியாவில் கொரோனா-வை விடவும் வேகமாக வளர்ந்து வரும் டிக்டாக்-இன் இந்தியா கிளை சார்பில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான நிதியை கொரோனாவை விரட்ட அரசுக்கு நன்கொடை கொடுத்துள்ளது.
இதோடு 4,00,000 hazmat பாதுகாப்பு உடல் கவசம் மற்றும் 2,00,000 மாஸ்க் ஆகியவற்றையும் கொடுத்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு உதவிய முக்கியமான இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டிக்டாக் இந்தியாவும் இணைந்துள்ளது.
டிக்டாக் இந்தியா இதுகுறித்து டிக்டாக் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய டெக்ஸ்டைல் அமைச்சகத்தின் துணையுடன், பாதுகாப்புக்குத் தேவையான சாதனங்களை முறையான தரம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு தயாரித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் மாஸ்க் அனைத்தும் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது டிக்டாக் இந்தியா. வாடிக்கையாளர்கள் மக்கள் வீட்டிலேயே இருக்கும் காரணத்தால் இந்தியாவில் தற்போது டிக்டாக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் பல முன்னணி பிரபலங்கள் தற்போது மக்களின் பாதுகாப்பு அவசியம் குறித்தும், கொரோனா பதிப்பு குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் டிக்டாக் போல் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் நிறுவன தலைவர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர். இதில் முக்கியமாக ஸ்னாப்டீல் நிறுவன ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்துள்ளனர்.
இதேபோல் பேடிஎம் நிறுவன தலைவர் விஜய் சேகர் சர்மா தனது 2 மாத சம்பளத்தைக் கொடுத்துள்ளார். ஓலா, ஸ்விக்கி, சோமேட்டோ ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பாவீஷ் அகர்வால் தனது ஒரு வருட சம்பளத்தைத் தங்கள் நிறுவன ஓட்டுநர்களின் நலனுக்காக ஒதுக்கியுள்ளார்.
இதேபோல் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனமும் தங்களது டெலிவரி ஊழியர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிதி திரட்டியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக