கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கொரோனா மானிட்டரிங் ஆப் சென்னை பெருநகர் மாநகராட்சி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவாமல் இருக்க தமிழக அரசு, மாநகராட்சி, மருத்துவர்கள், ஊடகத்தினர்கள் சார்பில் பெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு செயலியை உருவாக்கி இருக்கின்றனர்
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் செல்போனை உபயோகிக்கும்படி ஒரு செயலியை உருவாக்கி இருக்கின்றனர். மேலும் இந்த செயலி குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந்த செயலி குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதை பார்க்கலாம்.
சென்னை மாநகராட்சி வலைதளத்தில் இருக்கும்
இந்த செயலியானது பெருநகர சென்னை மாநகராட்சி வலைதளத்தில் இருக்கும். அதில் சென்று கொரோனா மானிட்டரிங் என்பதை கிளிக் செய்து செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரவிக்கப்படுகிறது. மேலும் இந்த செயலியானது சென்னை மாநகராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அச்சம் இருக்கிறதா
சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரோனா இருக்கிறதா என அச்சம் இருந்தாலோ, அறிகுறி இருந்தாலோ இந்த செயலி மூலம் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். பின் வீடு தேடி மருத்துவத் துறை சேர்ந்த ஒருவர் வந்து சோதிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்த மாதிரியை சோதனை
வீட்டிற்கு வரும் மருத்துவத் துறையை சேர்ந்தவர் ரத்த மாதிரியை சோதனை செய்து கொரோனா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா என தெரிவிப்பார். இந்த செயலியானது கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு கொரோனா அச்சத்தை போக்கவும் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக