சமீபத்தில் இந்திய அரசாங்கம் ஏப்ரல் 1, 2020 முதல் ஸ்மார்ட்போன்களில் ஜிஎஸ்டியை 12% முதல் 18% ஆக உயர்த்துவதாக முடிவு செய்தது.
இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து ரியல்மி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்து, தனது சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் எந்த அளவிலான விலை உயர்வை பெற்றுள்ளது என்கிற பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
ரியல்மி வெளியிட்டுள்ள ஒரு செய்தி அறிக்கையில், சமீபத்திய COVID-19 தொற்றுநோய் ஆனது ஸ்மார்ட்போன் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது ஸ்மார்ட்போன் காம்பனென்ட்களின் விலை உயர்வு மற்றும் விநியோக பற்றாக்குறைக்கு வழிவகுத்தது."
"மேலும், இந்திய ரூபாய் வீகிதம் தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவும், தேய்மானத்தையும் எதிர்கொண்டு வருகிறது. இது ஸ்மார்ட்போன் சாதனத்தின் ஒட்டுமொத்த செலவை பாதிக்கிறது, எனவே பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஏற்கனவே கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தங்களின் ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்துள்ளன. இந்த சிக்கல்கள் அனைத்தையும் மீறி, 2018 ஆம் அரையாண்டு முதல் ரியல்மி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரிக்கவில்லை." என்று அறிவித்துள்ளது.
அதாவது ரியல்மி ஸ்மார்ட்போன்கள் 2018 க்கு பிறகு முதல் முறையாக விலை உயர்வை சந்திப்பதாக நிறுவனம் கூறுகிறது.
ரியல்மி 6
அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்விற்கு பிறகு, ரியல்மி 6 ஸ்மார்ட்போன் ஆனது இப்போது ரூ.13,999 என்கிற விலையில் இருந்து வாங்க கிடைக்கிறது. முன்னதாக இது ரூ.12,999 என்கிற விலைக்கு வாங்க கிடைத்தது.
ரியல்மி 6 ப்ரோ
இதேபோல ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையும் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 க்கு தொடங்குகிறது. முன்னதாக இது ரூ.16,999 க்கு வாங்க கிடைத்தது.
ரியல்மி 5ஐ
ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இப்போது இது ரூ.9,999 முதல் வாங்க கிடைக்கும். முன்னதாக இத ரூ.8,999 க்கு தொடங்கியது.
ரியல்மி எக்ஸ்2
ரியல்மி எக்ஸ் 2 இப்போது ரூ.17,999 என்கிற விலையில் இருந்து தொடங்குகிறது. அதாவது தற்போது ரூ.1,000 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளது. முன்னதாக இது ரூ.16,999 க்கு வாங்க கிடைத்தது.
ரியல்மி எக்ஸ்2 ப்ரோ
மறுகையில் உள்ள ரியல்மி எக்ஸ்2 ப்ரோவின் 6 ஜிபி, 8 ஜிபி, 12 ஜிபி மாடல்கள் தற்போது முறையே ரூ.29,999, ரூ.31,999 மற்றும் ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கின்றன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.27,999, ரூ.29,999 மற்றும் ரூ.31,999 ஆக இருந்தது.
ரியல்மி 5 ப்ரோ
ரியல்மே 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அனைத்து இப்போது இந்தியாவில் ரூ.13,999 என்கிற விலைக்கு சில்லறை விற்பனை கடைகளில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999 ஆகும். அதாவது ரூ.1,000 என்கிற விலை உயர்வை பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக