Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

1000 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி.! விரைவில் அறிமுகம்...

1000 ரூபாய் விலையில் மருத்துவ சந்தையில் தடுப்பூசி கிடைக்கும். விரைவில் துல்லியமான புள்ளிவிவரம் வெளியாகும். என புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர்  ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.

 கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறிவதில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன.

இந்த தடுப்பூசி தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர்  ஆதார் பூனவல்லா கூறுகையில், ' மே மாத இறுதிக்குள் தடுப்பூசி உற்பத்தி தொடங்கி விடும். இந்த வருடம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமே ஒரு சிறந்த தயாரிப்பு எங்களிடம் கிடைக்கும்.

தடுப்பூசி உற்பத்தி பணியில்  கோடஜெனிக்ஸ் மற்றும் பிற அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டோம். அண்மையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன்  இணைந்து அதன் பின்னர் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் மீது நம்பிக்கை உள்ளது. எனது நிறுவனம் அமெரிக்க நிறுவனமான கோடஜெனிக்ஸுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் 1000 ரூபாய் விலையில் மருத்துவ சந்தையில் தடுப்பூசி கிடைக்கும். விரைவில் துல்லியமான புள்ளிவிவரம் வெளியாகும்.' என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக