Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 ஏப்ரல், 2020

18 மில்லியன் போலி மின்னஞ்சல்கள் வருகின்றன -கூகுள்.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்த, பல வதந்தியான செய்திகளும் சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கோவிட்-19 தொடர்பாக 18 மில்லியன் malware and phishing மின்னஞ்சல்களை பார்த்ததாக கூகுள் தெரிவித்துள்ளது. 

தினமும்  240 மில்லியன்  ஸ்பாம் மின்னஞ்சல்  உருவாவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதில் 99.9 சதவீத போலி மின்னஞ்சல்களை தொடர்ந்து முடக்கி வருவதாகக் கூகுள் கூறியுள்ளது. 

இந்த மின்னஞ்சல்களில் ஒன்று கொரோனா பற்றிய பீதியும்  அல்லது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைத்து பயனர்களைப் பதில் அளிக்க  வைக்கின்றனர். 

அப்படி இலையென்றால்  உலக சுகாதார அமைப்பு போல சில மின்னஞ்சல்கள் அனுப்புகின்றனர். இதை வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.பயனர்கள் தங்களுக்குத் தெரியாத முகவரியிலிருந்து வரும் மின்னஞ்சல்களில் இருக்கும் file-லை பதிவிறக்கம் செய்ய  வேண்டாம். 

மேலும் தெரியாத முகவரியிலிருந்து வரும் லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கும் முன் அது உண்மையான லிங்க் தானா   என்று பயனர்கள் பார்க்க வேண்டும் என கூகுள் கூறியுள்ளது. Malware எனப்படுவது ஒரு வகை கணினி வைரஸ் . இது கணினியில் உள்ள தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும்.

 phishing  எனப்படுவது மின்னஞ்சல் மூலமாக ஏமாற்றி தகவல்களை பெற்று அதை முறைகேடாக அல்லது சட்ட விரோதமாக பயன்படுத்துவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக