Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 18 ஏப்ரல், 2020

ராசயனம் ஏதுமின்றி காருக்குள் இருக்கும் கிருமிகளை அழிக்கும் புதிய தொழில்நுட்பம்.!

காரின் உட்பக்கம் உள்ள கிருமிகளை அளிக்க ரசாயனம் கலந்த ஸ்ப்ரே போன்ற எதோ ஒன்றை தெளித்து துடைத்து சுத்தப்படுத்துவோம். அதனை தவிர்த்து தற்போது காரினுள் இருக்கும் கிருமி, பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை அளிக்க புதிய தொழில்நுட்பத்தை மலேசியாவைச் சேர்ந்த மெட்கின் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் கண்டுபிடித்த தொழில்நுட்பம் செராஃபியூஷன் எனப்படுகிறது. பாக்டீரியா, வைரஸ், போன்றவை காற்றில் இருக்கும் நேர்மறையான அயன் மூலமாக சுவாசிக்கிறது.செராஃபியூஷன் தொழில்நுட்பமானது காற்றில் எதிர்மறை ஆக்ஸிஜன் அணுக்களை வெளியிட்டு விடும்.அது காற்றை ஸ்டெர்லைஸ் (சமநிலை போல) செய்து, ஓசோன் வாயுவை வெளியிட்டுவிடும். இதன் மூலம் காற்று சுத்தப்படுத்தப்படும். இந்தத் தொழில்நுட்பமானது முதலில் MG மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இதற்காக மெட்க்லின் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, இனி வரப்போகும் ஹெக்டர் மற்றும் ZS EV புதிய மாடல்களில் செராஃபியூஷன் தொழில்நுட்பத்தை அமைப்பதற்காக ஆராய்ந்து வருகிறது இந்நிறுவனம். இதனை காரில் உள்ள ஹீட்டர், வென்ட்டிலேட்டர், ஏசி சிஸ்டத்தின் மூலமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!