சீனாவிடம் தமிழக அரசு வாங்கியுள்ள 24,000 ரேபிட் கருவிகள் திருப்பி அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவை சேர்ந்த பையோ மெடிக்ஸ், வோன்ஃபோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவியின் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட முடிவுகள் தவறாக வருகிறது என்று புகார் எழுந்தது.
இதையெடுத்து, சீனாவில் இருந்து அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என இன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மாநில அரசுகளுக்கு கூறியது. மேலும் RT மற்றும் PCR கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
2 சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டது. இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்காக தமிழக அரசு வாங்கியுள்ள 24,000 ரேபிட் கருவிகள் திருப்பி அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், கருவிகள் திருப்பி அனுப்புவதால் தமிழக அரசு எந்தவித செலவும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக