Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைது!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் மிச்செல் போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல் பிரிவில் கைது.

ஜேசன் மிட்செல், ஒரு அமெரிக்க நடிகர். அவர் 2015, 'ஸ்ட்ரெய்ட் அவுட்ட காம்ப்டன்' என்ற படத்தில் மறைந்த ராப் பாடகர் ஈஸி இ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அவர் காங்: ஸ்கல் ஐலேண்ட், முட்பண்ட் மற்றும் முஸ்டாங் போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், மிசிசிப்பி மாகாணத்தில் போலீசார் வாகன சோதனையின் போது சிக்கிய ஜேசன் மிச்செல் காரை நிறுத்தி சோதனை செய்தனர். ஜேசன் காரில் அதிக அளவில் போதைப்பொருள் , 19 கைத்துப்பாக்கிகள், ஒரு ak 47 துப்பாக்கியும் இருந்தன. இதனால் போலீசார் ஜேசன் மிச்செலை கைது செய்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக