ராயல் என்பீல்டு ரசிகர்களின் விருப்ப மாடலாக விற்பனையில் இருக்கும் தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 ஃபயர்பால் மாடல் களமிறங்க உள்ளது.
ராயல் என்பீல்டு மீட்டியோர் 350யின் விலை ரூ.1,68,550 என ஆன்லைன் கான்ஃபிகுரேட்டர் மூலமாக தெரியவந்துள்ளது. இது தண்டர்பேர்டு எக்ஸ் மாடலை விட 5,000 ரூபாய் கூடுதலாகும்.
பெட்ரோல் டேங்க் அமைப்பில் எந்தவித மாற்றமும் புகுத்தப்படவில்லை. புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் சிறிய அளவிலான டிஜிட்டல் கிளஸ்ட்டரும் இதில் உள்ளது.
அதே நேரத்தில், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி, வட்ட வடிவ ஹெட்லைட், ஸ்பிளிட் இருக்கை, கிராப் ரெயில் கொண்டு மஞ்சள் நிறத்தில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய டபுள் கார்டு சேஸ் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட யூசிஇ என்ஜினுக்கு புத்தம் புதிய தொழிற்நுட்பங்களை கொண்டு SOHC 350 சிசி என்ஜினை பெறுகின்றது. இதில் கூடுதலான பவர், டார்க் திறன் சிறப்பாக இருக்க இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிர்வுகள் குறையாலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது ஊரடங்கு காரணமாக விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை முடிந்து மே அல்லது ஜூனில் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக