Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

ரசிகர்களின் பேராதரவு பெற்ற பஜாஜ் டிஸ்கவரின் விற்பனை நிறுத்தப்படுகிறதா?!

வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பஜாஜ் டிஸ்கவர் பைக் மாடலானது விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் பிஎஸ்-6 அப்டேட் பெற்று விற்பனைக்கு வருமா என்பதுதான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறைவான பட்ஜெட், எரிபொருள் சிக்கனம், குறைவான பராமரிப்பு போன்ற சிறப்பம்சங்கள் இந்த பைக்குகளுக்கு நல்ல வர்த்தக சந்தையை பெற்றுதந்தன. பஜாஜ் நிறுவனதின் விற்பனையில் டிஸ்கவர் மாடல்களின் வர்த்தகம் இன்றியமையாதது.

டிஸ்கவர் மாடல்கள் கடந்த 16 ஆண்டுகளாக வர்த்தகத்தில் நல்ல நிலைமையில் இருந்து வருகின்றன. ஊரக சந்தையில் டிஸ்கவர் மாடல்கள் அதிக வரவேற்பை பெற்று வந்தன. இந்நிலையில், பிளாட்டினா, சிடி100, அவென்ஜர், பல்சர், டோமினார் ஆகிய பாஜாஜ் மாடல்களை அந்நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தி களமிறக்கிவிட்டது. ஆனால், டிஸ்கவர் மாடல் மட்டும் இதுவரை விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் விற்பனையில் இருந்து களமிறக்கப்படாவிட்டாலும், கூடிய விரைவில் பிஎஸ்6 எஞ்சின் அமைப்புடன் டிஸ்கவர் மாடல்கள் மீண்டும் விற்பனைக்கு களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக