Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

இந்தியாவில் திருமணத்திற்காக விற்பனை செய்யப்படும் பெண்கள்...!

இந்தியாவில் திருமணத்திற்காக பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள் என சொன்னால் நம்புவீர்களா? ஆனா உண்மையில் பெண்கள் விற்பனை செய்யப்படும் சம்பவம் இந்தியாவில் நடக்கத்தான் செய்கிறது. அதுவும் சட்டத்திற்க உட்பட்டு. இதை பற்றி விரிவாக காணலாம் வாருங்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை திருமணம். இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 924 பெண்கள் தான் இருப்பதாக பாலின விகிதம் கூறுகிறது. இதனால் பெண்கள் கிடைக்காமல் ஆண்கள் பலர் திருமணம் முடிக்காமல் தவித்து வரும் சூழ் நிலையில் இருக்கன்றனர்.

மணமக்கள் தட்டுபாடு

இது ஒரு புறம் இருக்க என்னதான் பெண்கள் கிடைக்க இந்தியாவில் தட்டுப்பாடு இருந்தாலும் இந்தியாவில் ஏழை குடும்பங்கள் பல உள்ளன.அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் திருமணத்திற்கு மணமகன் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஒருபக்கம் மணமகள் இல்லாமல் ஆண்கள், மறு பக்கம் மணமகன் கிடைக்காமல் பெண்கள் இருக்கின்றனர்.

வரதட்சனை

இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் உள்ள வரதட்சனை முறைதான். இந்தியாவில் எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் மத்தியில் வரதட்சனை வாங்கும் பழக்கம் இருக்கிறது. எல்லா ஜாதி மதத்திலும் பெண் வீட்டார் பெண்ணிற்கு நகை போட வேண்டும் என நடைமுறை உள்ளது.

கனவு

இதனால் ஏழை விட்டு பெண்களுக்கு திருமணம் ஒரு பெரும் கனவாக இருக்கிறது. இந்நிலையில் நீங்கள் எல்லோரும் ஆச்சரிப்படும் வகையில் இந்தியாவில் ஒரு சம்பவம் நடக்கிறது யாராலும் கற்பனையிலும் நினைக்க முடியாத நிகழ்வு அது பெண்கள் எல்லாம் திருமணத்திற்காக விற்கப்படும் சந்தை தான் அது.

பேச்சுவார்த்தை

இந்த சந்தையில் தன் மகளை திருமணம் செய்து வைக்க முடியாத பெற்றோர்கள் தங்கள் மகனை அந்த சந்தைக்கு கொண்டு வருவார்கள். இந்த சந்தைக்கு தனக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காதவர்கள் வந்து அங்குள்ள பெண்ணை பார்த்து அந்த பெண்ணின் பெற்றொரிடம் பேசி அந்த பெண்ணை திருமணம் செய்ய அழைத்து செல்வார்கள்.

அடிமை

இவ்வாறாக அழைத்து செல்லும் போது அந்த பெண்ணின் பெற்றொருக்கு ஒரு தொகையை கொடுப்பார்கள். இது தான் இந்த சந்தையின் செயல்பாடு. இந்த சந்தையில் பெண்ணை வாங்குபவர்கள் கட்டாயம் அவர்களை முறைப்படி திருமணம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் எக்காரணத்தை கொண்டும் அடிமையாக பயன்படுத்தக்கூடாது என்பது விதி.

1619

இந்த பழக்கம் இப்பொழது அல்ல உலகில் முதல் முதலாக 1619ல் அமெரிக்காவில் விர்ஜினா என்ற மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் டவுண் என்ற பகுதியில் தான் பழக்கத்தில் இருந்தது. இந்த பகுதியில் திருமணமாகாத ஆண்கள் இந்த பகுதிக்கு வந்து பெண்களை பணத்திற்காக வாங்கி செல்வார்கள்.

விளம்பரம்

சில நேரங்களில் அந்த பகுதியில் ஒரு பெண் விற்பனைக்கு இருக்கிறாள் என விளம்பரமும் செய்வார்கள். இதே போன் நடைமுறை இந்தியாவில் வட மாநிலங்களில் இருந்து வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழே உள்ள தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத பெற்றோர்கள் அந்த பெண்களை பணத்திற்காக அந்த சந்தையில் விற்பனை செய்கின்றனர்.

விலை?

குறிப்பாக மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்கள் இந்த சந்தையில் விற்பனைக்கு வருகின்றனர். இந்த பெண்களை அவர்களது பெற்றோர்கள் சுமார் 50 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை சராசரியாக விற்பனை செய்கின்றனர். இன்றும் இவ்வாறான சந்தைகள் நடக்கத்தான் செய்கிறது.

இந்த சந்தை சட்டத்திற்கு விரோதமானது கிடையாது. பெண்ணின் விருப்பம் இன்றி இது நடக்கவில்லை. இதற்காக பெண்ணின் விருப்பம் இருப்பதால் இதை சட்டத்தால் தடுக்க முடியாது என போலீசார் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சந்தையில் பெண்களை விலைக்கு வாங்குவதில் சிக்கலும் இருக்கிறது.

குடும்ப சூழ்நிலை

இந்த சந்தைக்கு வரும் பெண்கள் பெரும்பாலும் தன் குடும்ப சூழ்நிலையில் தனக்கு அவர்களால் திருமணம் செய்து வைக்க முடியாது அதனால் இந்த சந்தைக்கு வருவது மூலம் தனக்கு ஒரு நல்ல வாழ்க்கையும், அதே நேரத்தில் தன் குடும்பத்திற்கும் பணம் கிடைக்கும் என் நோக்கத்தில் பெண்கள் இதற்காக சம்மதம் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் இதை பயன்படுத்தி சில மோசடி கும்பல்களும் இதில் களம் இறங்குகின்றன. சிலர் பெண்களை காசி கொடுத்து வாங்கி திருமணம் செய்து கொள்ளும் நிலையில் திருமணம் நடந்து சில நாட்களில் அந்த பெண் புகுந்த வீட்டில் உள்ள விலை மதிப்புள்ள பொருட்களை எல்லாம் சுருட்டிக்கொண்டு தப்பிவிடும் சம்பவங்களும் அதிகம் நடந்துள்ளன.

பாலியலுக்காக விற்பனை

அதே நேரத்தில் காசு கொடுத்து வாங்கப்படும் பெண்கள் அடிமைகள், போலவும் நடத்தப்பபடுகின்றனர். சில பெண்கள் இங்கு வாங்கப்பட்டு பின்னர் பாலியல் காரணங்களுக்காக விற்பனை செய்யப்படுகிறார்கள். இந்த கொடுமையும் இங்கு தான் நடக்கிறது. பலருக்கும் இந்தியாவில் பெண்கள் திருமணத்திற்காக விற்பனை செய்யப்படுவது தெரியாமல் இருந்திருக்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக