Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

ராஜீவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனின் தந்தை மரணம்!!

முருகனின் தந்தை வெற்றிவேல் (75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருந்த தகவல், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்கு சில தினங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமது தந்தையுடன் காணொளிகாட்சி மூலம் உரையாட, மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்மையில்‌
முருகன் அவசர மனு அனுப்பியிருந்தார்.

அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், முருகன் அவரது தந்தையை கடைசியாக பார்க்காத இயலாமல் போனது. இந்த நிலையில், வெற்றிவேல் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார்.

இதையடுத்து, குறைந்தபட்சம் முருகன் அவரது தந்தையின் இறுதிச் சடங்கை காணொளி காட்சி மூலம் காண்பதற்காவது தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதனை மத்திய அரசிற்கு அனுப்பிய போதும் அது மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசால், மீண்டும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பட்டபோதும், இதுவரை ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால் ஏழு பேரின் விடுதலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக