Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஏப்ரல், 2020

இனிமேல் 2GB-க்கு பதில் தினமும் 4GB; கலக்கும் வோடாபோன்!



Vodafone New Plans April 2020
கடந்த சில நாட்களாக, வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் 1.5 ஜிபி டெய்லி டேட்டா திட்டங்கள் மீதான ‘டபுள் டேட்டா’ சலுகையை நிறுத்துவதைக் கண்டோம். சமீபத்தில் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் டபுள் டேட்டா நன்மைகளை வழங்குவதை நிறுத்தியது, இருப்பினும் இப்போது அதே சலுகையின் கீழ் மேலும் மூன்று திட்டங்களைச் சேர்த்துள்ளது.


வோடபோன் ஐடியாவின் 2 ஜிபி டெய்லி டேட்டா திட்டங்களான ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 இப்போது டபுள் டேட்டா அதாவது இரட்டிப்பு டேட்டா நன்மைகளுடன் அனுப்பப்படுகின்றன. அதாவது இந்த திட்டங்கள் இனிமேல் முழு செல்லுபடியாகும் காலம் வரையிலாக ஒரு நாளைக்கு 4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

மொத்தத்தில், வோடபோன் ஐடியா இப்போது ரூ 299, ரூ.399, ரூ.449, ரூ.599 மற்றும் ரூ.699 ஆகிய ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களில் டபுள் டேட்டா நன்மைகளை வழங்கி வருகிறது.

குறிப்பிட்டுள்ளபடி, டபுள் டேட்டா சலுகையானது தற்போது டெல்லி, மத்தியப் பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய ஒன்பது வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது.

டபுள் டேட்டா சலுகையின் கீழ் இணைந்துள்ள புதிய மூன்று திட்டங்களான ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 ஆனது இப்போது 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்களுக்கு என்கிற செல்லுபடியின் கீழ் தினமும் 4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 2 ஜிபி டேட்டா திட்டங்களின்கீழ் மொத்தம் 168 ஜிபி வரையிலான டபுள் டேட்டா நன்மைகளைப் பெற விரும்பும் பயனர்கள் முடிந்த வேகத்தில் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்யவும்.

ஆரம்பத்தில், வோடபோன் ஐடியா அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் அதன் டபுள் டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியது, ஆனால் இப்போது, இது ஒன்பது வட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. டேட்டா நுகர்வு குறைவாக இருக்கும் வட்டங்களில் மட்டுமே வோடபோன் ஐடியா அதன் டபுள் டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

இந்தியாவில் லாக்டவுன் கட்டத்தில் மொபைல் நெட்வொர்க்குகளில் டேட்டா நுகர்வு மிக வேகமாக வளர்ந்து வருவதால் இது வோடபோன் ஐடியாவின் ஒரு நல்ல நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக