ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே பாப்-அப் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த நிலையில், மீண்டும் ஒரு ஹூவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி55ஐ டிவி (Huawei Smart Screen V55i TV)மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டிவி மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.
ஹூவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி55ஐ டிவி கருப்பு, சில்வர், சாம்பல் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் சீனாவில் மட்டும் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி55ஐ டிவி மாடல் ஆனது 55-இன்ச் 4கே எச்டிஆர் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 90 சதவீதம் டிசிஐ-பி 3 அகல வண்ண வரம்பு மற்றும் எம்இஎம்சி மோஷன் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹூவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி55ஐ டிவி மாடலில் பொறுத்தப்பட்டுள்ள பாப்-அப் கேமரா 1080பிக்சல் எச்டி வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.ஹூவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி55ஐ டிவி மாடலில் Honghu குவாட்-கோர் பிராசஸர் உடன் கார்டெக்ஸ்-ஏ73 மற்றும் கார்டெக்ஸ்-ஏ53 கோர்ஸ் ஆதரவும் இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
ஹூவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி55ஐ டிவி மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது, மேலும் புதிய ஏஐ தொழில்நுட்ப வசதிகள் இவற்றுள் அடக்கம் என்பதால், பயன்படுத்த அருமையாக இருக்கும்.
ஹூவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி55ஐ டிவி மாடலில் 2.4எல் பெரிய ஸ்பீக்கர் இடம்பெற்றுள்ளது, எனவே இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பு நான்கு 10W ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு 2W ட்வீட்டர்களுடன் வருகிறது. மேலும் மொபைல் திரையை இந்த டிவியில் இணைத்து பயன்படுத்த முடியும்.
ஹூவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி55ஐ டிவி மாடல் 379யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 42,000) என்ற விலை மதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக