ரேபிட் டெஸ்ட் கிட் பயன்பாடு குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) தற்போது அளித்துள்ள விளக்கம், சில மாநில அரசுகளுக்கு இந்த கருவியை பயன்படுத்த தெரியவில்லை என மறைமுகமாக சொல்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆனாலும், வைரசின் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய வேண்டியதும் அவசியமாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டுதான் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டன.
இவற்றை கொண்டு தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உரிய பரிசோதனைகள் சில தினங்களுக்கு முன் தொடங்கியது.
இந்த நிலையில் ரேபிட்கிட் பரிசோதனை முடிவுகள் சரியாக இல்லை என்று ராஜஸ்தான், பிகார் ஆகிய மாநில அரசு தெரிவித்தன. இதையடுத்து, இப்பரிசோதனையை இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்படி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியிருந்தது.
இதைத்தொடர்ந்து, ரேபிட் கிட் பயன்பாடு குறித்து, ஐசிஎம்ஆர் தற்போது ஓர் விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது, ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், அதனை எதிர்த்து போரிடுவதற்கான Antibody அவரது உடம்பில் இயற்கையாக உருவாகிவிடும்.
எனவே, தற்போதைய சூழலில் ஒருவருக்கு புதிதாக Antibody உருவாகியிருந்தால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்க அதிக வாய்ப்புண்டு. இதனை கண்டறியவே ரேபிட் டெஸ்ட் கிட்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
மாறாக, கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்கு இவற்றை பயன்படுத்தக் கூடாது. அதற்கு எப்போதும் போல் பிசிஆர் பரிசோதனையையே மேற்கொள்ள வேண்டும் என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் ஐசிஎம்ஆர் நிர்வாகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனைக்கும், பிசிஆர் பரிசோதனைக்கும் உள்ள வித்தியாசத்தை மாநில அரசுகள் நன்றாக அறிவிந்திருந்தும், இவை தொடர்பாக ஐசிஎம்ஆர் தற்போது அளித்துள்ள விளக்கம், சில மாநில அரசுகளுக்கு ரேபிட் கிட், பிசிஆர் பரிசோதனை ஆகியவை குறித்த புரிதல் இல்லை என்று ஐசிஎம்ஆர் மறைமுகமாக சொல்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக