சாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்10எஸ் மற்றும் கேலக்ஸி எம்20 ஆகியவைகள் சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன்கள் நிறுத்தப்பட்டதன் மூலம், சாம்சங் இந்தியா வலைத்தளமானது இப்போது கேலக்ஸி எம்21, கேலக்ஸி எம்31, கேலக்ஸி எம்30, கேலக்ஸி எம்30எஸ் மற்றும் கேலக்ஸி எம்30 போன்ற ஸ்மார்ட்போன்களை மட்டுமே கேலக்ஸி எம்-சீரிஸ் தயாரிப்பு பக்கத்தில் பட்டியலிடுகிறது.
கேலக்ஸி எம்10, எம்10எஸ் மற்றும் எம்20 ஆகியவைகள் பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசானிலும் வாங்க கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல், சில்லறை விற்பனையாளர்களின் விலை பட்டியலிலும் இந்த ஸ்மார்ட்போன்கள் இல்லை.
சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் அம்சங்கள்:
- 6.4 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே
- 1520 x 720 பிக்சல்கள் ஸ்க்ரீன் ரெசல்யூஷன
- 1.6GHz ஆக்டா கோர் எக்ஸினோஸ் 7884 பி ப்ராசஸர்
- 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் மெமரி
- 13 எம்பி + 5 எம்பி ரியர் கேமரா
- 8 எம்பி செல்பீ கேமரா
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 4,000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்20 அம்சங்கள்:
- 6.5 இன்ச் எஃப்.எச்.டி+ இன்பினிட்டி-வி டிஸ்ப்ளே
- 19.5: 9 திரை விகிதம்
- எக்ஸினோஸ் 7904 ஆக்டா கோர் ப்ராசஸர்
- 5000 mAh பேட்டரி
- 13 எம்பி + 5 எம்பி ரியர் கேமரா
- 8 எம்பி செல்பீ கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்10 அம்சங்கள்:
- 6.2 இன்ச் எச்டி+ இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
- எக்ஸினோஸ் 7870 ஆக்டா கோர் ப்ராசஸர்
- 13MP + 5MP ரியர் கேமரா
- 5 எம்பி செல்பீ கேமரா
- 3400 எம்ஏஎச் பேட்டரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக