இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டு உள்ள நிலையில் மக்கள் பணத் தேவைக்காக ஏடிஎம் தேடி அலைந்துகொண்டு இருக்கும் இந்த வேலையில் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சுமார் 412 கோடி ரூபாயை ஹோம் டெலிவரி செய்துள்ளது.
சிறப்பான சேவை
நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், எந்த ஊரில் இருந்தாலும், நீங்கள் இருக்கும் நகரம் அல்லது கிராமத்தில் அந்த வங்கி இல்லை என்றாலும் (ஆனால் நீங்கள் வைத்திருக்கும் வங்கி கணக்கில் பணம் இருக்க வேண்டும்) லோக்கல் போஸ்ட் ஆபீஸ்-க்கு போன் செய்து பணம் வேண்டும் என்றால் கேட்டால் போதும். தபால்காரர் அடுத்த 10 முதல் 15 நிமிடத்தில் உங்கள் வீட்டில் பணத்தோடு இருப்பார்.
அதைவிட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இச்சேவை பெற உங்களுக்குத் தபால் துறையில் வங்கி கணக்கு இருக் வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
412 கோடி ரூபாய்
இப்படி மார்ச் 24 முதல் ஏப்ரல் 23 வரையிலான காலத்தில் மட்டும் இந்தியா முழுவதும் தபால் துறை அலுவலகங்கள் சுமார் 21 லட்ச பணப் பரிமாற்றத்தில் சுமார் 412 கோடி ரூபாய் பணத்தை ஹோம் டெலிவரி செய்துள்ளது.
இதில் பெரும்பாலான பணம் ஊரகப் பகுதிகளில் டெலிவரி செய்யப்பட்டவை என்பது தான் கூடுதல் சிறப்பு அம்சம். இந்திய போஸ்ட் நாடு முழுவதிலும் சுமார் 1.36 லட்சம் கிளைகளைக் கொண்டுள்ளது.
இதுமட்டும் அலாலமல் சுமார் 1.86 லட்ச AePS இயந்திரம் வைத்து மக்களுக்கு இந்தச் சேவையைக் கொடுத்து வருகிறது. 2 லட்சம் ஊழியர்கள் இத்திட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்ச தபால்காரர்கள் நாடு முழுவதும் பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது பணப் பெறுதல் மட்டும் அல்லாமல் மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், டிடிஹெச், பணப் பரிமாற்றம் எனப் பல்வேறு சேவைகளை வீட்டின் வாசல் படியில் இருந்தே செய்துகொள்ள முடியும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் இச்சேவைகள் அனைத்தும் IPPB செயலியின் வாயிலாகவும் மக்கள் செய்துகொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல். அதிகளவிலான பயன் இத்திட்டம் தற்போது ஓய்வூதியம் பெறுபவர்கள், உடல் ஊனமுற்றோர், பெண்கள் மற்றும் ஏடிஎம் சென்று பணம் எடுக்க முடியாதவர்கள், ஏடிஎம்-ல் பணம் எடுக்கத் தெரியாதவர்கள் ஆகியோர் அதிகளவில் பயன் அடைந்து வருகிறார்கள்.
நாடு முழுவதும் முடங்கிய நிலையில் மக்களுக்கு எப்போதும் அரசு நிறுவனங்கள் சேவை செய்வதிலும் உதவி செய்வதிலும் தவறியது இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக