வெளிவந்த தகவலின் அடிப்படையில் எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
இந்த எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம்.
5 ஜிஇவைஃபை 6,புளூடூத், ஜிபிஎஸ் /ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக