ஃபிட்பிட் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அருமையான சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் புதிய சார்ஜ் 4 ஃபிட்னஸ் டிராக்கர் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த புதிய சாதனம் ஆனது 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபிட்பிட் சார்ஜ் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இப்போது இந்த சார்ஜ் 4 ஃபிட்னஸ் டிராக்கர் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
குறிப்பாக இந்த புதிய ஃபிட்பிட சார்ஜ் 4 மாடலில் பில்ட் இன் ஜிபிஎஸ் ஸ்பாடிஃபை போன்ற வசதிகளை கொண்டுள்ளது, மேலும் ஸ்விம் ப்ரூஃப் வடிவமைப்பு, இன்டக்டிவ் பட்டன்,ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் ஸ்கீரின், பிரைட்,கிரிஸ்ப் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தின் டிஸ்ப்ளே இயற்கை வெளிச்சமுள்ள சூழலிலும் எளிமையாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
ஃபிட்பிட் சார்ஜ் 4 ஃபிட்னஸ் சாதனத்தில் ஃபிட்பிட் பர்ஸ்பல்ஸ் 24/7 இதய துடிப்பு டிராக்கிங் வசதி, உடற்பயிற்சி, பவர் யோகா, நடைபயிற்சி என பல்வேறு உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி உளளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்னதாக ஃபிட்பிட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த பல்வேறு அம்சங்கள் புதிய ஃபிட்னஸ் சாதனத்தில் ஃபிட்பிட வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபிட்பிட் சார்ஜ் 4 பிளாக் சாதனம் ஆனது ரோஸ்வுட் மற்றும் ஸ்டாம் புளுஃபிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிரானைட் ரிஃப்ளெக்டிவ் / பிளாக் வோவென் பேண்ட் மற்றும் கிளாசிக் பிளாக் பேண்ட் கொண்ட ஃபிட்பிட் சார்ஜ் 4 ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக