மகராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருந்து 2 நண்பர்களுடன் தமிழகம் நோக்கி 500 கிலோ மீட்டர் நடந்து வந்த மாணவர்களில் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி லோகேஷ்(23) வயது மாணவர் நாக்பூரில் அருகே வர்தாவில் உணவு பதப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக உண்ண உணவின்றி தவித்த அவரோடு 29 பேரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர்.
இதில் லோகேஷ 1300 கிலோமீட்டர் தூரம் உள்ள தன்னுடைய கிராமாத்திற்கு நடந்து செல்ல முடிவெடுத்து கடந்த 9 நாட்களாக நடந்து வந்த நிலையில் வழியில் கிடைத்த லாரி போன்ற வாகனங்களில் எல்லாம் ஏறி சிறிது தூரம் கடந்தும் நடந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஹைதராபாத் அருகே செகந்த்ராபாத் அருகே வந்த போது அவர்களை தடுத்து நிறுத்தி மண்டபவம் ஒன்றில் தங்கவைத்துள்ளனர்.அப்போது லோகேஷ்க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.இதனை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக