ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றி திரிபவர்களை கைது செய்து 2 வருட சிறைத்தண்டனை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் மக்கள் சாலைகளில் சுற்றி திரிவதாகவும்;மேலும் அத்தியவாசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்ட உத்தரவை தவறாக பயன்படுத்தி பலர் வெளியே சுற்றி திரிவதாகவும்;காரணமின்றி அவ்வாறு சுற்றித்திரிபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் இது குறித்து உள்துறை செயலாளர் மாநில செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஊரடங்கை மீறி சாலை சுற்றுபவர்களை 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் வழக்குபதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக