Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

டக்வொர்த் லூயிஸ் முறையை கண்டுபிடித்த லூயிஸ் காலமானார்!

கிரிக்கெட் போட்டியின் போது மழை வந்து விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் டக்வொர்த் லூயிஸ் முறையில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது நிர்ணயம் செய்யப்படும் 
 
இந்த முறையை அறிமுகப்படுத்தியவர்கள் பிராங்க் டக்வொர்த் மற்றும் டோனி லூயிஸ் ஆகிய இருவர் தான். எனவே இந்த முறைக்கு டக்வொர்த்-லூயிஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. ஒரு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டால் எத்தனை ஓவர்களில் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என்பதை ரன்ரேட் மற்றும் விக்கெட்டுக்களின் அடிப்படையில் ஒரு கணித முறையில் இவர்கள் இருவரும் உருவாக்கினார்கள்.

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் டக்வொர்த் லூயிஸ் முறையை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான டோனி லூயிஸ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக