கணவன் - மனைவி தகராறில் 5 குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய். தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி.
உத்திரபிரதேசம் மாநிலம், பாதோகி மாவட்டம், ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்தவர், மிருதுல் யாதவ். இவருடைய மனைவி முஞ்சி யாதவ். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, சங்கர், மாதேஸ்வரி மற்றும் கேசவ் என மூன்று பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த முஞ்சி தனது குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.
அதன்படி குழந்தைகள் ஐந்து பேரையும் வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றதும், அந்த பகுதியில் ஓடும் கங்கை ஆற்றில் ஒவ்வொரு குழந்தையாக தூக்கி வீசினார். தந்தையுடன் ஏற்பட்ட சண்டையால் தங்களை எங்கேயோ பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார் என்று எண்ணி உடன் சென்ற குழந்தைகள், ஆற்றில் தூக்கி வீசும் போது பயத்தில் அலறி உள்ளனர்.
இதனையடுத்து, முஞ்சி தன் மனதை கல்லாக்கிக் கொண்டு ஐந்து குழந்தைகளையும் ஆற்றில் தூக்கி வீசினார். இதனையடுத்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு ஆற்றில் குதித்தார். ஆனால் உள்ளே குதித்து தத்தளித்த போது ஏற்பட்ட அச்சத்தால், அவர் நீந்தி கரையை வந்தடைந்த பின்னர் விடியும் வரை அங்கேயே தங்கியிருந்தார்.
இன்று அதிகாலையில் நடந்த சம்பவம் பற்றி, அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முஞ்சு குழந்தைகளை ஆற்றில் வீசிய இடம் மிகவும் ஆழமான பகுதி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக