இன்று நாம் முருங்கையை பயன்படுத்தி பல வகையான உணவுகள் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைகாய் மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- முருங்கைக்காய் - 2
- வெங்காயம் - 2
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- பச்சைமிளகாய் - 2
- பூண்டு - 5 பல்
- கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
- தக்காளி - 4
- உப்பு - தேவைக்கு
- சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
- தேங்காய் பூ - 4 தேக்கரண்டி
- எண்ணெய் - தாளிக்க
செய்முறை
முருங்கைக்காயை விரல் அளவு நறுக்கி பாதியளவு வேக வைக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு தாளிக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வெங்காயத்தின் நிறம் மாறியதும் நான்காக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின் வேக வைத்த நீருடன் முருங்கைக்காயினை கடாயில் சேர்க்க வேண்டும். அத்துடன் தேவைக்கு உப்பு மற்றும் சாம்பார் பொடியை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
மசாலா சுருண்டதும் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு உடனே இறக்க வேண்டும். இப்பொது சுவையான முருங்கைக்காய் மசாலா தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக