நுபியா ரெட் மேஜிக் 5ஜி கேமிங் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது . இப்போது ஸ்மார்ட்போன் உலக சந்தைகளில் அறிமுகமானதாக நுபியா அறிவித்துள்ளது. நிறுவனம் ரெட் மேஜிக் 5 ஜிக்கான முன்கூட்டிய ஆர்டர்களைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, இங்கிலாந்து, இஸ்ரேல், சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், இந்தோனேசியா, தைவான் மற்றும் மக்காவ் ஆகிய நிறுவனங்களுக்கான வலைத்தளங்களில் ரெட் மேஜிக் 5 ஜி பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கிடைப்பது தெரியவில்லை.
இந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.65-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1080 × 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 உடன் அட்ரினோ 650ஜிபியு சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்க வேண்டும்
நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனில் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா+8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 12எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.
நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது மேலும் 55வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 218கிராம் எடை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக