Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 ஏப்ரல், 2020

108 MP கேமரா உட்டபட 5 கேமராக்களுடன் நோக்கியா 9.3 ப்யூர் வியூ விரைவில் அறிமுகமாகிறது!

தற்பொழுது ஸ்மார்ட்போன் சந்தையில் அனைத்து ஸ்மார்ட்போன்களும் கேமராவை மையமாகக் கொண்டே வெளியிடப்பட்டு வருகிறது. கேமராவை மையமாக கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் உருவாக்கி வருகிறது. நோக்கியா 9.3 ப்யூர் வியூ என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள கேமரா அம்சம் தெரிந்தால் நீங்களே வாவ் என்பீர்கள்.

நோக்கியா பவர் யூசரின் கூற்றுப்படி, நோக்கியா 9.3 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன், 64 மெகாபிக்சல் கொண்ட முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் வேண்டும், இதில் இமேஜ் ஸ்டேப்பிலைசேஷன் (OIS) கொடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 108 மெகாபிக்சல் கொண்ட கேமரா அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் கொண்ட கேமராவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

108 மெகாபிக்சல் கேமரா

108 மெகாபிக்சல் கேமரா உட்பட ஐந்து பின்புற கேமராக்களுடன் நோக்கியா 9.3 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் பென்டா-கேமரா அமைப்பைப் நிறுவனம் புதுப்பித்து வருகிறது என்று எதிர்பார்க்கப்படுவதக வலைத்தள தகவல்கள் குறிப்பிடுகிறது. எச்எம்டி குளோபல் கடந்த ஆண்டு நோக்கியா 9 ப்யர் வியூ ஸ்மார்ட்போனில் ஐந்து பின்புற கேமரா அமைப்பைப் பரிசோதனை செய்தது.

 நோக்கியா 7.3 உடன் அறிமுகமா?

நோக்கியா 9.3 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நோக்கியா 7.3 உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐந்து பின்புற கேமராக்கள் மட்டுமின்றி, முதன்மையான வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 9 ப்யூர் வியூ

இத்துடன், நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன், 5.99' இன்ச் QHD + POLED டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. செயல்திறனுக்காக இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் மாடலுடன் வழங்கப்பட்டது. இந்த போனின் சிறப்பே இதில் வழங்கப்பட்ட கேமரா மச்சங்கள் தான்.

கேமரா அமைப்பு

நோக்கியா 9 ப்யர்வியூவில் உள்ள கேமரா அமைப்பில் ஐந்து 12 மெகா பிக்சல் கேமரா, இரண்டு ஆர்பிஜி சென்சார்கள் மற்றும் மூன்று மோனோ சென்சார்கள் கொண்ட கேமரா அம்சத்துடன் அறிமுகமானது. இதில் செல்ஃபிக்காக முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் கேமரா ஒன்றையும் நோக்கியா நிறுவனம் வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில்

நோக்கியா 9 ப்யூர்வியூவின் பிற முக்கிய அம்சங்கள் குய் சார்ஜிங், ப்ளூடூத் 5.0 மற்றும் IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் ஆகியவற்றைக் கொண்ட 3,320 எம்ஏஎச் பேட்டரி உடன்பட அனைத்தும் அடங்கும். இந்த புதிய மாடல் நோக்கியா 9.3 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக