இந்தியாவில் பல ஸ்டார்ட்அப் இண்டர்நெட் நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமலும், முதலீடு இல்லாமல் இருக்கும் வேளையில் செலவுகளைக் குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில் சோமேட்டோ-வின் கைப்பற்றல் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி மட்டுமே கொடுத்துள்ளது.
Grofers நிறுவனம் இந்தியாவில் கொரோனா தாக்கம் ஏற்பட்ட நாள் முதல் Grofers நிறுவனத்தின் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல் வர்த்தகத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் கடந்த சில வாரத்தில் மட்டும் சுமார் 750 மில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இந்நிறுவன கைப்பற்றல் குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சாப்ட்பேங்க் Grofers நிறுவனத்தின் முக்கிய முதலீட்டு நிறுவனமாக இருக்கும் சாப்ட்பேங்க் தற்போது மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையிலும் இப்புதிய கூட்டணி நிறுவனத்தில் 100 முதல் 200 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை செய்யத் தயார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளது.
சோமேட்டோ மார்கெட் கொரோனா தாக்கத்தின் காரணமாக உணவு டெலிவரி குறைந்த நிலையில், மளிகை பொருட்களை டோர் டெலவரி செய்யும் சோமேட்டோ மார்கெட் என்ற புதிய வர்த்தகத்தைச் சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட நிலையில், Grofers நிறுவனத்தைச் சோமேட்டோ கைப்பற்றினால் சோமேட்டோ மார்கெட் வாடிக்கையாளர்களுக்கும் Grofers டெலிவரி செய்யும். உபர் ஈட்ஸ் Grofers நிறுவனத்தைச் சோமேட்டோ கைப்பற்றினால் அது 2வது மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும்.
சமீபத்தில் தான் இந்தியாவில் தனது உணவு டெலிவரி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியது. பிக்பேஸ்கட் சோமேட்டோ இதற்கு முன் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் பிக்பேஸ்ட் நிறுவனத்தை வாங்க முயற்சி செய்தது ஆனால் அது நடக்கவில்லை, இதேபோல் அமேசான் நிறுவனமும் பிக் பேஸ்கட் நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது, ஆனால் அதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவா.. ஜப்பானா..
சீனாவின் அலிபாபா குழுமத்தின் Ant பைனான்சியல் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான சோமேட்டோ, ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் 650 மில்லியன் டாலர் (கடைசி முதலீட்டுச் சுற்றில் இதன் மதிப்பு) மதிப்பிலான Grofers நிறுவனத்தைக் கைப்பற்றக் கடைசிக் கட்ட முயற்சியில் உள்ளது.
இந்திய இண்டர்நெட் நிறுவனத்தையும், அதன் வர்த்தகத்தையும் கைப்பற்ற இவ்விரு வெளிநாட்டு நிறுவனங்களும் மிகப்பெரிய போட்டியைப் போட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக