Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

யார் அதிகம் நிதியுதவி கொடுத்தது?! உயிரிழப்பில் முடிந்த ரசிகர்கள் மோதல்.!

விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா நிவாரணத்திற்கு யார் அதிகம் பணம் கொடுத்தது? விஜயா? ரஜினியா? என்பது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

கொரோனா நிவாரண நிதியுதவியாக பலரும் தங்களால் இயன்ற நியுதவிகளை அளித்து வருகின்றனர். இதில், திரைப்பட நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என பலர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வந்தனர்.

விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் 22 வயதான யுவராஜ் விஜய் ரசிகர் ஆவார். இதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் 22வயதான தினேஷ் பாபு இவர் ரஜினி ரசிகர் ஆவார். இருவருமே நண்பர்கள்.

நேற்று இருவரும் குடிபோதையில், கொரோனா நிவாரணத்திற்கு யார் அதிகம் பணம் கொடுத்தது? விஜயா? ரஜினியா? என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், தினேஷ் பாபு, யவராஜை அடித்து தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதில் தலையில் அடிபட்டு யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தினேஷ் பாபுவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக