Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

Airtel அதிரடி! 1 வருட Disney+ Hotstar சந்தா இலவசம்; தினமும் 3 ஜிபி டேட்டா - விலை என்ன தெரியுமா?

பாரதி ஏர்டெல் டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனம் புதிய டேட்டா பேக் திட்டத்தை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேட்டா பேக் திட்டத்துடன் பயனர்களுக்கு டிஸ்னி + மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுக்கான ஒரு வருட சந்தாவைக் கூடுதல் கட்டணம் எதுவுமின்றி ஏர்டெல் இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் விலை என்ன? இதன் நன்மைகள் என்ன? எப்படி இந்த டிஸ்னி + மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாகப் பெறுவது என்று விளக்கமாகப் பார்க்கலாம்.

டிஸ்னி + மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் ஊரடங்கை முன்னிட்டு பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் தனது டேட்டா ஒன்லி பேக் திட்டத்தின் கீழ் புதிதாக ரூ.401 என்ற டேட்டா ரீசார்ஜ் திட்டத்தைப் புதிதாகச் சேர்த்துள்ளது. இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு டிஸ்னி + மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவின் ஒரு ஆண்டு சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. டிஸ்னி + மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சாந்தாவின் விலை ஆண்டுக்கு ரூ.399 என்பது குறிப்பிடத்தக்கது.

401 ரூபாய் திட்டத்திற்கு 399 ரூபாய் மதிப்பிலான சந்தா இலவசமா?

என்ன ரூ.399 மதிலான விஐபி சந்தா இலவசமா? என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது, உண்மையிலேயே இந்த ரூ.399 டிஸ்னி + மற்றும் ஹாட்ஸ்டார் சந்தாவை எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இது ஒருபுறம் இருக்கா ஏர்டெல் நிறுவனம் அதன் காம்போ பிரேபியட் திட்டத்துடன் அமேசான் பிரைம் சந்தாவையும் இலவசமாக வழங்கி வருகிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். 

ஏர்டெல்லின் ரூ.401 டேட்டா பேக் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்

ஏர்டெல்லின் இந்த ரூ.401 திட்டம் தனது பயனருக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகிறது. மேலும், இந்த திட்டதின் கீழ் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது, ஏனெனில் இது டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும் டேட்டா ஒன்லி திட்டமாகும். இந்த திட்டம் தினமும் உங்களுக்கு 3ஜிபி டேட்டா நன்மை ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து அடுத்த 28 நாட்களுக்கு வழங்குகிறது.

அமேசான் பிரைம்-க்கு அடுத்தபடியாக ஹாட்ஸ்டார் உடன் ஏர்டெல் கூட்டு  

முன்பே சொன்னது போல், பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே அதன் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சந்தாவை, அதன் வரம்பற்ற காம்போ ப்ரீபெய்ட் திட்டமான ரூ.349 திட்டத்துடன் வழங்கி வருகிறது. அமேசான் நிறுவனத்துடன் கூட்டு சேர்த்து சலுகையை வழங்கி வந்த ஏர்டெல், தற்பொழுது ஹாட்ஸ்டாருடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த புதிய ரூ.401 டேட்டா பேக் திட்டமானது ஏற்கனவே அனைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது. 

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் என்ன நன்மைகளை வழங்குகிறது?

பாரதி ஏர்டெல் ரூ .398 ப்ரீபெய்ட் திட்டம் அதன் பயனருக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

டிஸ்னி + மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் 3 ஜிபி டேட்டா

இருப்பினும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.401 ப்ரீபெய்ட் டேட்டா திட்டம், குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை நீக்கி, அதற்குப் பதிலாக, இது 28 நாட்களுக்கு 3 ஜிபி தினசரி டேட்டா நன்மையுடன் ஒரு வருட டிஸ்னி + மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்குகிறது. 

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவின் விலை என்ன?

டிஸ்னி + மற்றும் ஹாட்ஸ்டார் சேவை இந்தியாவில் சமீபத்தில் தான் துவங்கப்பட்டது. ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் டிஸ்னி நிறுவனம் கூட்டுச்சேர்ந்து டிஸ்னி + மற்றும் ஹாட்ஸ்டார் என்று தங்களின் சேவை பெயரை மாற்றம் செய்தது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவின் ஒரு வருட கட்டணம் ரூ.399 என்ற விலையில் கிடைக்கிறது.

ஏர்டெல் பயனர்களுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்

கூடுதல் செலவு எதுவுமின்றி, ஏர்டெல் இந்த சலுகையை இலவசமாக வழங்கியுள்ளது மிகச் சிறப்பு. சிறந்த பகுதியாக டேட்டா நன்மையுடன் இந்த 365 நாள் சந்தா கிடைப்பது ஏர்டெல் பயனர்களுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட் ஆகும். 

புதிய ப்ரீபெய்ட் திட்டத்திற்கான நிபந்தனை மற்றும் விதிமுறை

இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்திற்கான விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் ஏர்டெல் விவரித்துள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த புதிய திட்டத்தை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். 'தவறான விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர் 360 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த ரூ.401 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும்' என்று ஏர்டெல் நிறுவனம் தெளிவாக தெரிவித்துள்ளது.

டேட்டா பேக் 28 நாள் வேலிடிட்டி முடிந்தால் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா என்னவாகும்?

இது தவிர, ரூ.401 டேட்டா பேக் திட்டத்தை வாடிக்கையாளர்கள் நடப்பில் உள்ள வேறு எந்த ப்ரீபெய்ட் திட்டத்துடனும் சேர்த்து ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இது ஒரு டேட்டா பேக் என்பதால், ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்கள் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை அனுபவிக்க, எந்தவொரு வரம்பற்ற காம்போ திட்டத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம். குறிப்பிட்டுள்ளபடி, டேட்டா நன்மை 28 நாட்களுக்குப் பிறகு முடிவடையும், அதே நேரத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும்.

ஏர்டெல் வழியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை எப்படி செயல்படுத்துவது?

பாரதி ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை, ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடு வழியாகவோ அல்லது ரீசார்ஜ் செய்தவுடன் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட இணைப்பு வழியாகவோ செயல்படுத்திக்கொள்ளலாம். ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டில் கூடுதல் நன்மைகளை அணுகுவதற்காக ஒரு பிரத்தியேக பிரிவைக் கொண்டுள்ளது, அங்கு பயனர்கள் இந்த சலுகையைத் தேர்வு செய்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவைப் பெற்றுக்கொள்ளலாம்.

இது மிகவும் முக்கியம்

இந்த திட்டத்துடன் வாங்கப்பட்ட டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா சுயாதீனமாக இயங்குகிறது என்றும் ஏர்டெல் கூறியுள்ளது. இதனால், பயனர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டாரிடமிருந்து விஐபி சந்தாவைப் பெற ரீசார்ஜ் செய்யப்பட்ட அதே எண்ணைப் பயன்படுத்தி டிஸ்னி + ஹாட்ஸ்டார் பயன்பாட்டில் லாகின் செய்ய வேண்டும். டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவின் நிலையை ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது ஹாட்ஸ்டாரின் மொபைல் பயன்பாட்டின் மூலம் நீங்கள் அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக