Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ரோட்டில் கிடந்த 2000 ரூபாய் நோட்டை எரித்த சூரத் நகராட்சி அதிகாரிகள்!



சிவில் அதிகாரிகள்

பொதுவாக நாம் நடக்கின்ற பாதையில் ஒரு 2,000 ரூபாய் நோட்டைப் பார்த்தால் என்ன செய்வோம்..?

சுற்றிப் பார்ப்போம். யாராவது அருகில் இருந்தால் உங்களுடையதா? எனக் கேட்போம். கொஞ்சம் மனம் மாறினால் தூக்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கிளம்பிவிடுவோம். அவ்வளவு தான்.

ஆனால் கொரோனா வைரஸ் இப்போது, கீழே கிடக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களைக் கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைத்திருக்கிறது.

என்ன ஆச்சு?

குஜராத்தில் புனா (puna) என்கிற பகுதியில் ஒரு 2,000 ரூபாய் நோட்டு அனாமத்தாக சாலையில் கிடந்து இருக்கிறது. சுமார் காலை 10.30 மணி வாக்கில், இந்த 2,000 ரூபாய் நோட்டைப் பார்த்தவர்கள், காவலர்களுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள். அதோடு 2000 ரூபாய் நோட்டு, காற்றில் பறக்காமல் இருக்க, அதன் மேல் ஒரு கல்லையும் வைத்து இருக்கிறார்கள்.

சிவில் அதிகாரிகள்

காவலர்கள் 2,000 ரூபாய் நோட்டு கிடந்த இடத்துக்கு வந்து, அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் விரிவாக விசாரித்து இருக்கிறார்கள். அதோடு சூரத் நகராட்சி அதிகாரிகளையும் அழைத்து இருக்கிறார்கள். ஸ்பாட்டுக்கு வந்த சூரத் நகராட்சி அதிகாரிகள், 2,000 ரூபாய் நோட்டை முதலில் முழுமையாக சானிட்டைஸ் செய்து இருக்கிறார்கள்.

எரிச்சிட்டாங்க

சந்தேகப்படும் விதத்தில் சாலையில் கிடந்த 2,000 ரூபய் நோட்டை, சானிட்டைஸ் செய்த பின், மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, சூரத் நகராட்சி அதிகாரிகளே எரித்துவிட்டார்களாம். காவலர்கள், இந்த 2000 ரூபாய் பிரச்சனை தொடர்பாக ஒரு புகாரையும் பதிவு செய்து விசாரித்து வருகிறார்களாம்.

சிசிடிவி

யாராவது வேண்டும் என்றே இந்த 2,000 ரூபாய் நோட்டை, பயத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் விட்டுச் சென்று இருக்கிறார்களா..? எனப் பார்க்க, அருகில் இருக்கும் சிசிடிவி கேமராக்களின் வீடியோ காட்சிகளை, காவலர்கள், வாங்கி வைத்து இருக்கிறார்களாம்.

முந்தைய சம்பவங்கள்

இப்படி, ஏற்கனவே டெல்லி சாந்தினி செளக் நகர பகுதியில், ஒருவர், தன் எச்சில் மற்றும் வியர்வையை 2,000 ரூபாய் நோட்டுக்களில் தடவி மூன்று 2,000 ரூபாய் நோட்டுக்களை நடை பாதையில் போட்டதாக ஒரு சம்பவம் பதிவாகி இருப்பதும் இந்த இடத்தில் நாம் நினைவில் கொண்டு வந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

ஏன்?

இந்த கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தில் இப்படி ஒரு 2,000 ரூபாய் நோட்டை எரிக்கிறார்கள் என்றால், கொரோனா பயத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். கண்ணுக்குத் தெரியாத கொரோனா நம்மை என்ன பாடு படுத்துகிறது. முழுசா 2,000 ரூவா போச்சே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக