தற்போதைய காலங்களில் அதிகளவில் சமூக வலைத்தளங்களை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிலும் தற்போது முக புத்தக காலங்கள் ஓய்ந்து இன்ஸ்டாகிராம் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பொழுதுபோக்குகள் அதிகம் கொண்ட சமூக வலைத்தளம் என்பதை விட பாதுகாப்பு அதிகம் கொண்டது என்பதே இதன் பயன்பாட்டாளர்கள் அதிகரிக்க காரணம். இந்த இன்ஸ்டாகிராமில் நமக்கு தெரியாத சில உபயோகமான டிப்ஸ் & ட்ரிக்ஸ் பற்றி பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் டிப்ஸ் & ட்ரிக்ஸ்
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் மற்றும் பார்வையாளர்கள் வர வேண்டுமானால் முதலில் நாம் டேக்ஸ் உபயோகிக்க வேண்டும். நாம் போடா கூடிய புகைப்படம் அல்லது வீடியோ பதிவுக்கு தகுந்தவாறு, டேக்ஸ் உபயோகித்தால் அதிகளவு பார்வையாளர்களை பெற்று தரும். அடுத்ததாக செட்டிங்ஸ்சில் உள்ள கிரியேட்டர் ஒப்ஷனை கிளிக் செய்து உபயோகித்தால் நமது பதிவு மற்றும் முகப்பு பாகத்தை பார்ப்பவர்களை அறியலாம். மேலும், வேகமான பதில் கொண்ட குறுஞ்செய்திகளை அறியலாம். மற்ற சமூக வலைத்தளங்களை விட இன்ஸ்டாகிராம் உபயோகிக்கும் போது இணையத்தளம் எளிதில் காலியாகும். இதற்கு செட்டிங்சில் உள்ள cellular data எனும் பக்கத்துக்கு சென்று அந்த பட்டனை on செய்து விடவும்.
அடுத்ததாக நாம் ஒருவருக்கு புகைப்படம் அனுப்பும் போது முறை பார்க்கலாம், மொபைலில் பதிவு செய்யலாமா? என சில தகவல்கள் தற்போது கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கவனித்து உபயோகப்படுத்தலாம். ஏதேனும் ஒரு இன்ஸ்டகிராம் பொருள் விற்பனை செய்யும் பக்கத்தின் மீது சந்தேகம் இருப்பின், அந்த பக்கத்திற்கு சென்று அவர்களது முகப்பில் கொடுக்கப்பட்டுள்ள 3 புள்ளிகளை அழுத்தினாள் about this account எனும் ஒப்ஷனை கிளிக் செய்து முழு விவரம் அறிந்துகொள்ளலாம்.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக