Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

'பிழையை சரிசெய்கிறேன்'.! விரைவில் அதற்கான அப்டேட் வெளியிடப்படும் - ஆப்பிள்

ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள பயனர் விவரங்களை பல ஆண்டுகளாக கசியவிட்ட பிழையை விரைவில் சரி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் சுமார் 50 கோடி ஐபோன் பயனாளர்களை பாதித்த பிழை ஒன்றை சரி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிழையை சான்ஃபிரான்சிஸ்கோவை சேர்ந்த மொபைல் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் கண்டறிந்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் ஐபோன் மட்டுமின்றி ஐபேட்களிலும் இந்த பிழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள மெயில் செயலியில் கண்டறியப்பட்டு இருக்கும் பிழையை ஏற்படுத்த ஹேக்கர்கள் 6 சைபர்செக்யூரிட்டி சோதனைகளை முறியடித்து இருப்பதாக ஆய்வு நிறுவன அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

பின்னர் சமீபத்திய ஐஒஎஸ் இயங்குதளம் கொண்டிருந்த ஐபோன்களில் இருந்தும் ஹேக்கர்கள் தகவல்களை திருட இந்த பிழை வழி வகுத்து இருக்கிறது. இந்த பிழை மெயில் செயலியை இயக்கி வந்த அனைத்து விவரங்களையும் ஹேக்கர்களுக்கு வழங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து மெயில் செயலியில் உள்ள பிழை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பாதித்து இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விரைவில் இதற்கான அப்டேட் உலகளவில் வெளியிடப்படும் என்று ஆப்பிள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக