Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

வீடு தேடி வரும் காய்கறிகள்: திருப்பூர் கலெக்டரின் அசத்தல் ஐடியா!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் மளிகை மற்றும் காய்கறிகள் கடைகள் திறந்திருக்கும் என்பதால் காய்கறிகள் வாங்க அதிகளவு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். மேலும் அந்த நேரத்தில் பொதுமக்களில் சிலர் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் திருப்பூர் பகுதி மக்களுக்கு வீடுதேடி காய்கறி தரும் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். ரூ.30, ரூ.50 மற்றும் ரூ.100 என்ற மூன்று தொகுப்புகளில் பொதுமக்கள் தேவையான தொகுப்பை ஆர்டர் செய்தால் வீடு தேடி காய்கறிகள் வரும். இந்த மூன்று தொகுப்புகளில் என்னென்ன காய்கறிகள் உள்ளது என்பதை பார்ப்போம்
 
ரூ.30 தொகுப்பு: 100 கிராம்‌ - கத்தரிக்காய்‌, வெண்டைக்காய்‌, மிளகாய்‌, 250 கிராம்‌ - தக்காளி, பீட்ரூட்‌ , கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா 1 காய்‌ - சுரை, முருங்கை, 1 கட்டு - கீரை
 
ரூ.50 தொகுப்பு: 100 கிராம்‌ - கத்தரிக்காய்‌, மிளகாய்‌, பாகல்‌, 250 கிராம்‌ - வெண்டைக்காய்‌, தக்காளி, புடலங்காய்‌, பீர்க்கன்‌, பீட்ரூட்‌, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, 1 காய்‌ - சுரை, முருங்கை, 1 கட்டு - கீரை
 
ரூ.100 தொகுப்பு:  100 கிராம்‌ - கேரட்‌, பீன்ஸ்‌ 50௦ கிராம்‌ - தக்காளி, 250 கிராம்‌ - கத்தரிக்காய்‌, வெண்டைக்காய்‌, மிளகாய்‌, புடலங்காய்‌, பாகல்‌, பீர்க்கன்‌, பீட்ரூட்‌, 1 காய்‌ - சுரை, முருங்கை, 2 கட்டு - கீரை 1 கட்டு - கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா
 
மேலும் கலெக்டர் விஜயராகவன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த காய்கறிகளை வாங்க அணுக வேண்டிய போன் நம்பர்களையும் பதிவு செய்துள்ளார். இதேபோல் சென்னை உள்பட அனைத்து கலெக்டர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக