அடுத்த மூன்று மாதங்களுக்கு EMI தடையை அறிவித்த பின்னர், பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா ஒரு படி மேலே சென்று சில்லறை கடன் வாங்குபவர்களுக்கு பெரிய நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது.
அதன்படி இந்த பொதுத்தொறை வங்கி வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள், கல்விக் கடன்கள், தனிநபர் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் பலவகையில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில்., மார்ச் 2020 -ல் கழிக்கப்பட்ட சில்லறை கடன் EMI-க்களை திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் முழு அடைப்பின் போது அதன் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான நிதி நெருக்கடியையும் அனுபவிக்க கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இந்த அதிரடி அறிவிப்பினை வங்கி வெளியிட்டுள்ளது. வீட்டுக் கடன் மற்றும் கார் கடனைப் பெற்ற பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள் வங்கி வழங்கிய இந்த EMI ரிட்டர்ன் சலுகையைப் பெறலாம்.
வாசகர்களின் கூடுதல் தகவலுக்கு, இந்த மார்ச் 2020 EMI ரிட்டர்ன் சலுகை வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் அறிவித்துள்ளது. 2020 மார்ச் முதல் 2020 மே வரை மூன்று மாதங்களுக்கு EMI தடைக்கான ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியான பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாங்க் ஆப் பரோடாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சீவ் சாதா, வங்கியின் EMI ரிட்டர்ன் சலுகை குறித்து கூறுகையில், ரிசர்வ் வங்கியின் சலுகை மாத இறுதியில் வந்ததால் மார்ச் மாதத்திற்கான சில EMI ஏற்கனவே கழிக்கப்பட்டது. எனவே, பேங்க் ஆப் பரோடா மார்ச் EMI-ஐ அதன் வாடிக்கையாளர்களுக்கு விரும்பினால் திருப்பித் தர முடிவு செய்துள்ளது. 2020 மார்ச் முதல் மே வரை ரிசர்வ் வங்கியின் EMI தடைக்கால சலுகையுடன் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த ரிசர்வ் வங்கியின் சலுகையைத் தேர்வுசெய்ய விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பாங்க் ஆப் பரோடா ஏற்கனவே EMI தடை விதித்துள்ளது. எனினும் மார்ச் 2020 EMI வருமானத்துடன் EMI தடைக்கு இந்த ரிசர்வ் வங்கியின் சலுகையைத் தேர்வுசெய்ய விரும்புகிறீர்களா என்று வங்கி அதிகாரிகள் அதன் வாடிக்கையாளர்களிடம் கேட்டறிந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக