Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் என்று உச்சரிக்கக் கூடாது… மாஸ்க் அணியக் கூடாது! எந்த நாட்டில் தெரியுமா?

மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மேனிஸ்தான் என்ற நாட்டில் பொது இடத்தில் முகக்கவசம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமானோரைப் பாதித்துள்ளது. இதுவரை இந்த கொடிய வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 42,000 ஐ தாண்டியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் தங்கள் அனைத்து விதமான தொழில்களையும் மூடி விட்டு பொருளாதார சரிவை சந்தித்துள்ளன.

உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகியவையெ கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸிடம் திணறி வருகின்றன. ஆனால் மத்திய ஆசியாவில் உள்ள நாடான துர்க்மேனிஸ்தானில் இதுவரை ஒரு கொரோனா நோயாளி கூட கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது பொது மக்களுக்கு மட்டுமல்ல… ஊடகங்களுக்கும்தான். மேலும் பொதுமக்கள் யாராவது முகக்கவசம் அணிந்து சென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளார் அந்நாட்டின் அதிபர் அதிபர் குர்பங்குலி பெர்டிமுகாம்தோவ். ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் நாடுகளில் கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தில் உள்ள துர்க்மேனிஸ்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக