நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பறிப்பது நெருக்கடியில் நிறுத்தும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்கள் என எதுவும் இயங்காமல் இருக்கிறது.இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், முக்கிய முடிவாக நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுநர்கள் உட்பட அனைத்து எம்பி-களின் சம்பளமும் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது எனவும், இந்த சம்பள குறைப்பு ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் மத்திய அமைச்சரவை குழுவில் முடிவு செய்யப்பட்டதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மேலும், தொகுதி மேம்பாட்டு திநிதியும் 2 ஆண்டிற்கு நிறுத்தப்படும் எனவும் அறிவித்தார்.இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,மக்களின் நல்வாழ்வுக்கு கூடுதல் நிதி ஒதுக்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியையும் பறிப்பது நெருக்கடியில் நிறுத்துவதாகும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக