கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து தரப்பினரும் சற்று சறுக்களை சந்தித்தனர்.
இந்நிலையில் தமிழக வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்காக ஒரு புதிய அறிவிப்பை தற்போது தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
அந்த செய்திக் குறிப்பில், தமிழகத்தில் உள்ல அனைத்து வியாபாரிகளும் 1 சதவீதச் சந்தை கட்டணத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை எனவும், விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும் போது வியாபாரிகளிடம் பெறும் 1% சந்தை கட்டணம் ரத்து.
விவசாயிகளிடம் பயன்பாட்டு கட்டணத் தொகையும் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை வசூலிக்கப்படாது எனவும், விவசாயிகள் அறுவடைசெய்யும் காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கான கட்டணத்தை முழுவதும் அரசே ஏற்கும் என்றும், காய்கள், பழங்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய முன் வரும் உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காய்கறிகள், பழங்கள், தடையின்றிக் கிடைக்கக் கூடுதலாக 500 நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்புகளும் அதில் இடம் பெற்றுள்ளது. மேலும் விவசாய விளைப் பொருட்களை விற்பனை செய்வதில் விவசாயிகளுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் வேளாண் துணை இயக்குநரையும்,மாவட்ட வேளாண் துணை இயக்குநரையும் (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
மாநில அளவில் 044-22253884, 044-22253885, 044-22253496, 9500091904-ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக