கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆயுத கொள்முதலை நிறுத்துமாறு முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வாஇராஸ் தீவிரமாக பரவி வருவதையடுத்து, இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸால், மத்திய அரசு பல சிக்கனமான திட்டங்களை வகுத்து வருகிறது.
அந்த வகையில், ஆயுத கொள்முதலை நிறுத்திவைக்கும்படி முப்படைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக ராணுவ விவகாரங்களுக்கான அமைச்சகம், முப்படைகளுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அக்கடிதத்தில், கொரோனா பாதிப்பு உள்ளவரை, ஆயுத கொள்முதலை நிறுத்தி வைக்கும்படி தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசு நிறுத்திவைக்க தெரிவித்துள்ள ஆயுத கொள்முதல் திட்டங்கள் பல நிலைகளில் உள்ளன. பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவில் இருந்து எஸ்400 ஏவுகணைகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து டாங்குகள், பீரங்கிகள், ரைபிள்கள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளது மற்றும் இந்திய கடற்படை அமெரிக்காவில் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க திட்டமிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக